நிதி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்தியாவிற்கும் கத்தாருக்கும் இடையிலான முதலீட்டு ஒத்துழைப்பு குறித்த கூட்டத்திற்கு மத்திய இணையமைச்சர் திரு பங்கஜ் சவுத்ரி மற்றும் கத்தார் இணையமைச்சர் டாக்டர் அஹ்மத் பின் முகமது அல் சயீத் ஆகியோர் இணைந்து தலைமை தாங்கினர்

Posted On: 28 AUG 2025 6:43PM by PIB Chennai

இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு முதலீட்டு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்காக, கத்தார் நாட்டைச் சேர்ந்த பிரதிநிதிகளுடன் மத்திய நிதி அமைச்சகத்தின் பொருளாதார விவகாரத் துறை இன்று புதுதில்லியில் உயர்மட்ட பங்குதாரர்களின் சந்திப்பை நடத்தியது.

இந்த சந்திப்பிற்கு மத்திய நிதித்துறை இணையமைச்சர் திரு பங்கஜ் சவுத்ரி மற்றும் கத்தார் வெளியுறவு வர்த்தக விவகாரங்களுக்கான இணையமைச்சர் டாக்டர் அஹ்மத் பின் முகமது அல் சயீத் ஆகியோர் தலைமை தாங்கினர்.

கத்தார் பிரதிநிதிகள் குழு ஆகஸ்ட் 27-28, 2025 அன்று புதுதில்லிக்கு வருகை தந்தது. கத்தாரின் வர்த்தகம் மற்றும் தொழில், போக்குவரத்து, தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பம் மற்றும் நகராட்சி அமைச்சகங்களின் பிரதிநிதிகள் மற்றும் கத்தார் முதலீட்டு ஆணையம் (QIA), கத்தார் ஏர்வேஸ், கியூ டெர்மினல்ஸ், ஹஸ்ஸத் ஃபுட்ஸ், கத்தார் வர்த்தக சபை மற்றும் கத்தார் வணிகர்கள் சங்கம் போன்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் இந்தக் குழுவில் இடம்பெற்றிருந்தனர்.

இந்தக் கூட்டத்தில் நடைபெற்ற விவாதங்கள், குறிப்பாக உள்கட்டமைப்பு, மேம்பட்ட உற்பத்தி, போக்குவரத்து, தளவாடங்கள், உணவு பதப்படுத்துதல், சுகாதாரம், குறைக்கடத்திகள் மற்றும் நிதி போன்ற துறைகளில் கத்தார் முதலீடுகளை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்து கவனம் செலுத்தின.

பிப்ரவரி 2025-ல் கத்தார் அரசின் அமீர் இந்தியாவிற்கு அரசு முறை பயணம் மேற்கொண்ட போது, ​​இந்தியாவில் 10 பில்லியன் டாலர் முதலீடு செய்வதற்கும், கத்தார் முதலீட்டு ஆணைய அலுவலகத்தைத் திறப்பதற்கும் கத்தார் உறுதியளித்ததை இரு தரப்பினரும் நினைவு கூர்ந்தனர். இந்தச் சூழலில், முக்கியத் துறைகள் மற்றும் குறிப்பிட்ட திட்டங்கள் மற்றும் நிறுவனங்களில் கவனம் செலுத்தும் கத்தார் முதலீட்டு ஆணையம் மற்றும் பிற கத்தார் நிறுவனங்களின் முதலீடுகளுக்கான விவாதங்களை மேலும் ஊக்குவிக்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு, இந்தியாவில் முதலீடுகளுக்கான பல்வேறு வாய்ப்புகளைத் தாங்கள் காண்பதாக கத்தார் தரப்பு தெரிவித்தது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2161628     

 ***

 

(Release ID: 2161628)

AD/BR/KR


(Release ID: 2161789) Visitor Counter : 5
Read this release in: Marathi , English , Urdu , Hindi