மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
நாட்டில் இணையதள வசதி உள்ள பள்ளிகளின் எண்ணிக்கை 63.5%-ஆக அதிகரித்துள்ளது
Posted On:
28 AUG 2025 4:39PM by PIB Chennai
நாட்டில் இணையதள வசதி உள்ள பள்ளிகளின் எண்ணிக்கை 63.5%-ஆக அதிகரித்துள்ளது என்று மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ள 2024-25-க்கான ஒருங்கிணைந்த மாவட்ட தகவல் முறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2023-24-ம் ஆண்டில் இந்த எண்ணிக்க 53.9%-ஆக இருந்தது.
இதேபோல் 2023-24-ல் கணினி வசதி பெற்ற பள்ளிகளின் எண்ணிக்க 57.2%-ஆக இருந்த நிலையில் 2024-25-ல் 64.7%-ஆக அதிகரித்துள்ளது என்று அந்த அறிக்கை கூறுகிறது. 2024-25-ல் மின்சாரம், குடிநீர், மாணவிகள், மாணவர்களுக்கு தனித்தனியான கழிப்பறைகள், போன்ற அடிப்படைக் கட்டமைப்புகள் 90 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது என்றும் விளையாட்டுத்திடல், நூலகம் ஆகிய உள்கட்டமைப்பு சுமார் 90% அளவுக்கு உள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
பள்ளிகளில் மாணவிகள் சேர்க்கை விகிதம் 2023-24-ல் 48.1%-ஆக இருந்தது. இது 2024-25-ல் 48.3%-ஆக அதிகரித்துள்ளது. ஆசிரியைகள் விகிதம் 2023-24-ல் 53.3%-ஆகவும் 2024-25-ல் 54.2%-ஆகவும் இருந்தது என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடக்கப் பள்ளிகளில் 2023-24-ல் 3.7%-ஆக இருந்த மாணவர்களின் இடைநிற்றல் 2024-25-ல் 2.3%-ஆக குறைந்துள்ளது. நடுநிலைப்பள்ளியில் 2023-24-ல் 5.2%-ஆக இருந்த மாணவர்களின் இடைநிற்றல் 2024-25-ல் 3.5%-ஆக குறைந்துள்ளது. உயர்நிலைப் பள்ளியில் 2023-24-ல் 10.9%-ஆக இருந்த மாணவர்களின் இடைநிற்றல் 2024-25-ல் 8.2%-ஆக குறைந்துள்ளது என்றும் மத்திய கல்வி அமைச்சக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2161543
***
AD/SMB/SG/KR/DL
(Release ID: 2161647)
Visitor Counter : 18