பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ராணுவ மருத்துவமனையின் முதல் ரோபோடிக் லேசர் கண்புரை அறுவை சிகிச்சை

Posted On: 28 AUG 2025 4:22PM by PIB Chennai

ராணுவ மருத்துவமனையில்  அதிநவீன ALLY தகவமைப்பு கண்புரை சிகிச்சை முறையைப் பயன்படுத்தி ரோபோடிக் தனிப்பயன் லேசர் கண்புரை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இந்த சிகிச்சையைச் செய்த இந்தியாவின் முதல் அரசு நிறுவனமாகவும், தெற்காசியாவில் இரண்டாவது நிறுவனமாகவும் ஆனது.

இந்த அறுவைச் சிகிச்சை பிரிகேடியர் மிஸ்ராவால் 61 வயது நோயாளிக்கு நடத்தப்பட்டது. வழக்கமான அறுவை சிகிச்சை பயனுள்ளதாக இருந்தாலும், FLACS ஒரு பெரிய தொழில்நுட்ப முன்னேற்றத்தைக் குறிக்கிறது,

இந்த அதிநவீன தொழில்நுட்பத்தின் ஒருங்கிணைப்பு, அதன் பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு மிகவும் மேம்பட்ட, பாதுகாப்பான மற்றும் பயனுள்ள சுகாதார சேவையை வழங்குவதற்கான ஆயுதப் படைகளின் உறுதிப்பாட்டை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. FLACS ராணுவ மருத்துவத்தில் முக்கியமான துல்லியமான மற்றும் சிறந்த விளைவுகளை உறுதி செய்கிறது.

பாதுகாப்புத் துறை அமைச்சக திரு ராஜ்நாத் சிங், ராணுவத் தலைமைத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி மற்றும் ஆயுதப்படை மருத்துவ சேவைகள் அறுவை சிகிச்சை நிபுணர் வைஸ் அட்மிரல் ஆர்த்தி சரின் ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ், ராணுவ மருத்துவமனையில் உள்ள கண் மருத்துவத் துறை, கண் பராமரிப்பில் மருத்துவ சிறப்பு மற்றும் புதுமைகளின் பாரம்பரியத்தை தொடர்ந்து வலுப்படுத்துகிறது.

***

 

 

(Release ID: 2161533)

AD/PKV/KR/DL


(Release ID: 2161637) Visitor Counter : 19
Read this release in: English , Urdu , Hindi , Marathi