நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சகம்
தேசிய இளையோர் நாடாளுமன்ற போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான விருது வழங்கும் நிகழ்ச்சி
Posted On:
28 AUG 2025 2:47PM by PIB Chennai
தேசிய இளையோர் நாடாளுமன்ற போட்டியில், வெற்றி பெற்றவர்களுக்கான பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி நாளை (29.08.2025) புதுதில்லி நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள நூலக கட்டட அரங்கில் நடைபெறவுள்ளது. கேந்திரிய வித்யாலயா பள்ளிகளுக்கான 2024-25-ம் ஆண்டிற்கான 35-வது தேசிய இளையோர் நாடாளுமன்ற போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு இந்த விருதுகள் வழங்கப்பட உள்ளன.
இந்தப் போட்டியில் தங்களது திறனை வெளிப்படுத்தி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி மக்களவை உறுப்பினர் திருமதி பன்சூரி சுவராஜ் தலைமையில் நடைபெறவுள்ளது. இந்த நிகழ்ச்சியில் அசாம் மாநிலத்தில் சில்சார் பகுதியில் ஸ்ரீகோனா ஓஎன்ஜிசி வளாக கேந்திரிய வித்யாலயா பள்ளி மாணவர்கள் தொடர்ந்து இந்த முறையும் வெற்றி பெற்றுள்ளனர்.
கடந்த 37 ஆண்டுகளாக கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் இளையோர் நாடாளுமன்ற போட்டிகளை மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சகம் நடத்தி வருகிறது. 2024-25-ம் ஆண்டிற்கான 35-வது இளையோர் நாடாளுமன்ற போட்டியில் நாடு முழுவதிலும் 25 மண்டலங்களில் உள்ள 175 கேந்திரிய வித்யாலயா பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர்.
சுயஒழுக்கம் சகிப்புத்தன்மையுடன் கூடிய பன்முகத்திறன், கருத்துக்கள் மற்றும் உரிமைகளை வெளிப்படுத்தும் திறன், ஜனநாயக முறையிலான வாழ்வியல் முறை போன்ற பல்வேறு அம்சங்களில் இளைய தலைமுறையை ஊக்குவிக்கும் முறையில் இந்தப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. நாடாளுமன்ற நடைமுறைகள் மற்றும் விதிமுறைகள், தொழில்நுட்ப விவாதங்கள், தன்னம்பிக்கையுடன் விவாதிக்கும் திறன் தலைமைத்துவ பண்பு, பேச்சுத்திறன் போன்ற குணநலன்களை மாணவர்கள் பெறும் வகையில் இந்தப் போட்டிகள் நடைபெறுகின்றன.
சர்தார் வல்லபாய் படேல் சுழற்சி நாடாளுமன்ற கேடயம், கோப்பை அடங்கிய பரிசை இப்போட்டியில் தேசிய அளவில் முதலிடத்தைப் பிடித்துள்ள அசாம் மாநிலத்தில் (சில்சார் மண்டலம், கிழக்குப்பகுதி) உள்ள ஓன்ஜிசி ஸ்ரீகோனா வளாக கேந்திரிய வித்யாலயா பள்ளிக்கு வழங்கப்படுகிறது. இவை தவிர மண்டல அளவில் வெற்றி பெற்றுள்ளவர்களுக்கு பரிசு கோப்பைகளை மக்களவை உறுப்பினர் திருமதி பன்சூரி சிவராஜ் நான்கு கேந்திரிய பள்ளிகளுக்கு வழங்குகிறார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2161481
----
AD/SV/KPG/KR
(Release ID: 2161579)
Visitor Counter : 10