தேசிய மனித உரிமைகள் ஆணையம்
azadi ka amrit mahotsav

பீகார் மாநிலம் ஹஃப்லகஞ்ச் பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் மாணவர்களை அறையில் அடைத்து வைத்து கொடுமை செய்ததாக வெளியான புகாரை, தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு ஏற்பு

Posted On: 28 AUG 2025 1:09PM by PIB Chennai

பீகார் மாநிலம் கதிஹார் மாவட்டத்தில் உள்ள ஹஃப்லகஞ்ச் பகுதியில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றில், 18 மாணவர்களை அவர்களது ஆசிரியர் அறைக்குள் அடைத்து வைத்து உடல் ரீதியான தண்டனை விதித்ததாக ஊடகங்களில் வெளியான செய்தியை, இந்திய தேசிய மனித உரிமைகள் ஆணையம்  தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டுள்ளது.

செய்தி அறிக்கையின் உள்ளடக்கம் உண்மையாக இருந்தால், மாணவர்களின் மனித உரிமைகள் மீறல் தொடர்பாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆணையம் தெரிவித்துள்ளது. மாநில தலைமைச் செயலாளர் மற்றும் கதிஹார் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரண்டு வாரங்களுக்குள்  விரிவான அறிக்கை அளிக்குமாறு ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

 ***

 

(Release ID: 2161439)

AD/PKV/KR

 


(Release ID: 2161574) Visitor Counter : 11