தேசிய மனித உரிமைகள் ஆணையம்
azadi ka amrit mahotsav

பஞ்சாபில் ஒரு கும்பல் நடத்திய தாக்குதலால் ஜிம்பாப்வே மாணவர் இறந்த விவகாரம் - தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை

Posted On: 27 AUG 2025 11:12AM by PIB Chennai

பஞ்சாப் மாநிலம் பதிண்டாவில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் 2025 ஆகஸ்ட் 21 அன்று ஜிம்பாப்வே மாணவர் ஒருவர் ஒரு கும்பலால் தாக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக ஊடகங்களில் செய்தி வெளியானது. இதை தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளது. பதிண்டாவின் தல்வண்டி சபோ நகரில் உள்ள குரு காஷி பல்கலைக்கழகத்தில் அந்த மாணவர் படித்து வந்ததாக கூறப்படுகிறது.

 

இந்த சம்பவம் தொடர்பாக, பஞ்சாப் காவல்துறை தலைமை இயக்குநர், பதிண்டாவில் உள்ள குரு காஷி பல்கலைக்கழக பதிவாளர் ஆகியோர் இரண்டு வாரங்களுக்குள் விரிவான அறிக்கை அளிக்குமாறு, ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

***

(Release ID: 2161077)

AD/SMB/PLM/DL


(Release ID: 2161163)