தேசிய மனித உரிமைகள் ஆணையம்
azadi ka amrit mahotsav

மகாராஷ்டிராவில் மருந்து உற்பத்தி நிறுவனத்தில் ஏற்பட்ட விபத்தில் நான்கு தொழிலாளர்கள் இறந்த சம்பவம் - தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை

Posted On: 27 AUG 2025 11:13AM by PIB Chennai

மகாராஷ்டிராவின் பால்கர் மாவட்டம், தாராபூரில் உள்ள போயிசர் தொழிற்பேட்டையில் உள்ள ஒரு மருந்து உற்பத்தி நிறுவனத்தில் நைட்ரஜன் வாயு கசிவு ஏற்பட்டு அதை சுவாசித்ததில் நான்கு தொழிலாளர்கள் 2025 ஆகஸ்ட் 21 அன்று இறந்ததாகவும், இரண்டு பேர் காயமடைந்ததாகவும் ஊடகங்களில் செய்தி வெளியானது. இந்த செய்தி அடிப்படையில் தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை நடத்துகிறது.

இந்த சம்பவம் குறித்து இரண்டு வாரங்களுக்குள் விரிவான அறிக்கை அளிக்குமாறு மகாராஷ்டிர தலைமைச் செயலாளர், காவல்துறை தலைவர் ஆகியோருக்கு ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இதனிடையே, வாயு கசிவுக்கான காரணத்தைக் கண்டறியவும், ஏதேனும் பாதுகாப்பு குறைபாடுகள் இருந்ததா என்பதை மதிப்பிடவும் மாவட்ட அதிகாரிகள் சம்பவம் குறித்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

***

(Release ID: 2161078)

AD/SMB/PLM/DL


(Release ID: 2161160)