சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நெடுஞ்சாலை சுங்கச்சாவடி பணியாளர்கள் குழந்தைகளின் கல்வியை ஊக்குவிக்கும் திட்டம்

Posted On: 26 AUG 2025 5:39PM by PIB Chennai

நெடுஞ்சாலை சுங்கச்சாவடி ஊழியர்கள் குழந்தைகளின் கல்வி விருப்பங்களை ஆதரிக்க, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வெர்டிஸ் உள்கட்டமைப்பு அறக்கட்டளையுடன் இணைந்து 'திட்டம் ஆரோஹன்'-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது.  இந்தத் திட்டத்தை தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின்  தலைவர் திரு சந்தோஷ் குமார் யாதவ், வெர்டிஸ் உள்கட்டமைப்பு அறக்கட்டளையின் நிர்வாக இயக்குநரும் இணை தலைமை நிர்வாக அதிகாரியுமான டாக்டர் ஜாபர் கான் மற்றும் மூத்த  அதிகாரிகள் முன்னிலையில் புதுதில்லியில் உள்ள நெடுஞ்சாலை தலைமையகத்தில் தொடங்கி வைத்தார். இந்த முயற்சி பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு தரமான கல்விக்கு சமமான அணுகலை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

SMEC அறக்கட்டளையின் பாரத் கேர்ஸ் மூலம் செயல்படுத்தப்படும், 'திட்டம் ஆரோஹன்'-ன் முதல் கட்டத்திற்கு  1 கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறது.  ஜூலை 2025 முதல் மார்ச் 2026 வரை நடைபெறும் இந்த திட்டம், 11 ஆம் வகுப்பு முதல் இறுதி ஆண்டு பட்டப்படிப்பு வரை 500 மாணவர்களை உள்ளடக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. ஒவ்வொருவருக்கும் 2025–26 நிதியாண்டில் ஆண்டுக்கு ரூ.12,000 உதவித்தொகை வழங்கப்படும். கூடுதலாக, முதுகலை மற்றும் உயர் படிப்புகளை விரும்பும் 50 திறமையான மாணவர்களுக்கு தலா ரூ.50,000 உதவித்தொகை வழங்கப்படும்..

 

இந்த நிகழ்வில் பேசிய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின்  தலைவர் திரு சந்தோஷ் குமார் யாதவ், “‘ஆரோஹன் திட்டம்’ நமது நெடுஞ்சாலைகளை தினமும் இயக்கும் மக்களுக்கும் அவர்களின் குடும்பங்களின் விருப்பங்களுக்கும் ஆணையத்தின் அர்ப்பணிப்பை பிரதிபலிக்கிறது. அவர்களின் குழந்தைகளின் கல்வி மற்றும் வழிகாட்டுதலில் முதலீடு செய்வதன் மூலம், இந்தியாவின் அடுத்த பத்தாண்டு வளர்ச்சிக்கு சக்தி அளிக்கும் திறமைகளை நாங்கள் வளர்த்து வருகிறோம்” என்றார்.

விண்ணப்ப செயல்முறை ஆன்லைன் போர்டல் மூலம் நடத்தப்படும், மாணவர்கள் கல்விப் பதிவுகள், வருமானச் சான்று, சாதிச் சான்றிதழ், அடையாளச் சான்று போன்ற தொடர்புடைய ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். ஒரு முறையான தேர்வு செயல்முறை, தொடர்ச்சியான வழிகாட்டுதல் மற்றும் முன்னேற்றச் சான்று போன்ற தொடர்புடைய ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும், அத்துடன் நீண்ட காலத்திற்கு தகுதியான மாணவர்களுக்கு ஆதரவளிக்கும் புதுப்பித்தல் வழிமுறையுடன், உதவித்தொகை வழங்குவதற்கான வெளிப்படைத்தன்மை மற்றும் உள்ளடக்கத்தை உறுதி செய்யும்.

நாடு தழுவிய இந்தத் திட்டம் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள பரந்த சுங்கச்சாவடிகளின் வலையமைப்பில் பணியமர்த்தப்பட்ட சுங்கச்சாவடி பணியாளர்களின் சமூகத்தை அடையும். நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடி ஊழியர்களின் திறமையான மாணவர்களுக்கு நிதி உதவி, தொழில் விழிப்புணர்வு மற்றும் கட்டமைக்கப்பட்ட வழிகாட்டுதலை 'ஆரோஹன் திட்டம்' வழங்கும். .

----

(Release ID: 2160931)

AD/PKV/DL


(Release ID: 2161013)
Read this release in: English , Urdu , Hindi