நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்
கோதுமை இருப்பை 2026 மார்ச் 31 வரை மத்திய அரசு திருத்தியமைத்துள்ளது
Posted On:
26 AUG 2025 4:39PM by PIB Chennai
நாட்டில் ஒட்டுமொத்த உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யவும், பதுக்கலைத் தடுக்கவும் அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் மத்திய அரசு, கோதுமை வர்த்தகர்கள், மொத்த விற்பனையாளர்கள், சில்லறை விற்பனையாளர்கள் உள்ளிட்டோருக்கு சரக்கு இருப்பை நிர்ணயித்துள்ளது. எதிர்வரும் பண்டிகைக் காலத்திற்கு முன்பாக கோதுமை விலை சீராக இருப்பதற்கான தொடர் முயற்சியின் ஒரு பகுதியாக 2026 மார்ச் 31 வரை கோதுமை இருப்பு வரைமுறையை மத்திய அரசு திருத்தியமைக்க முடிவு செய்துள்ளது.
அதன்படி தற்போது வர்த்தகர்கள் மற்றும் மொத்த விற்பனையாளர்கள் 3,000 மெட்ரிக் டன் வரை கோதுமை இருப்பு வைத்துக்கொள்ளலாம் என்ற நிலையில், திருத்தியமைக்கப்பட்டதன்படி, இனிமேல் 2,000 மெட்ரிக் டன் அளவிற்கு மட்டுமே கோதுமை இருப்பு வைக்க முடியும். சில்லறை விற்பனையாளர்கள் 10 மெட்ரிக் டன்னுக்குப் பதிலாக 8 மெட்ரிக் டன் வரை மட்டுமே கோதுமை இருப்பு வைக்க முடியும். இந்நிறுவனங்களில் நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட அதிக அளவில் இருப்பு இருந்தால் 15 நாட்களுக்குள் நிர்ணயிக்கப்பட்ட அளவில் கோதுமையை இருப்பு வைக்க வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2160873
***
AD/IR/KPG/SG/DL
(Release ID: 2160962)