நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்
உணவு தேவைப்படும் நாடுகளுக்கு உதவ இந்தியா, உலக உணவு பாதுகாப்பு திட்டத்துடன் இணைந்துள்ளது
Posted On:
25 AUG 2025 5:03PM by PIB Chennai
உலகளவில் பசியை எதிர்கொண்டு வரும் நாடுகளுக்கு உதவும் நோக்கில் மத்திய அரசு உலக உணவு திட்டத்துடன் இணைந்துள்ளது. இதற்கான ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது. அதன்படி மத்திய அரசின் உணவு மற்றும் பொது விநியோகத்துறை இந்தியாவில் இருந்து செறிவூட்டப்பட்ட அரிசியை உலக உணவு பாதுகாப்பு திட்டத்தின் மூலம் உலகளவில் உணவு மற்றும் ஊட்டச்சத்து தேவையை எதிர்கொண்டுள்ள மிகவும் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளுக்கு வழங்கவுள்ளது.
இந்த ஒத்துழைப்பு உலகளாவிய கூட்டாண்மைகளின் வலிமையை சுட்டிக் காட்டுகிறது. இந்தியாவில் இருந்து அரிசியைப் பெறுவதன் மூலம், உலக உணவுப் பாதுகாப்புத் திட்டம், வேளாண் உற்பத்தி உபரியாக உள்ள நாட்டின் வளங்களைப் பயன்படுத்தி உயிர்காக்கும் உதவிகளை வழங்கவும், பசிக்கு எதிராக உறுதியான நடவடிக்கையை மேற்கொள்ள உதவும்.
இது குறித்து குறிப்பிட்டுள்ள மத்திய அரசின் உணவு மற்றும் பொது விநியோகத்துறை செயலாளர் திரு சஞ்சீவ் சோப்ரா, வசுதைவ குடும்பகம் - பூமி ஒரு குடும்பம் என்ற கொள்கைக்கும், ஒருவருக்கொருவர் மற்றும் அவர்களின் பகிரப்பட்ட எதிர்காலத்திற்கும் கூட்டுப் பொறுப்பு என்ற கொள்கைக்கும் இந்தியா உறுதிபூண்டுள்ளது என்று தெரிவித்துள்ளார். உணவுப் பாதுகாப்பின்மையை எதிர்கொள்ளும், தேவைப்படும் சமூகத்தினருக்கு நாட்டின் மனிதாபிமான ஆதரவு இந்த அணுகுமுறையின் ஒரு பகுதியாகும் என்று அவர் கூறியுள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2160603
***
(Release ID: 2160603)
AD/IR/SG/RJ/DL
(Release ID: 2160709)