வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

அரசின் மின்னணு சந்தையில் ஒட்டுமொத்த வர்த்தக மதிப்பு ரூ.15 லட்சம் கோடியை கடந்து சாதனை

Posted On: 25 AUG 2025 3:54PM by PIB Chennai

அரசின் மின்னணு சந்தையான ஜெம் இணையதளத்தில் வரலாற்றுச் சாதனையாக  ஒட்டுமொத்த வர்த்தக மதிப்பு 15 லட்சம் கோடி ரூபாயை கடந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

2016-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த தளத்தின் மீது நாடு முழுவதிலும் உள்ள வாங்குபவர்கள் மற்றும் விற்பனையாளர்கள் நம்பிக்கை கொண்டுள்ளதாகவும், பொது கொள்முதல் அமைப்பில் திறன் மற்றும் வெளிப்படை தன்மையை ஏற்படுத்தும் நோக்கில் இந்தத் தளம் உருவாக்கப்பட்டது. கடந்த 9 ஆண்டுகளில் இந்த டிஜிட்டல் தளம் அதிவிரைவான வளர்ச்சி கண்டுள்ளதுடன், அரசின் சார்பில் கொள்முதல் செய்பவர்கள் மற்றும் பல்வேறு விற்பனையாளர்களை ஒருங்கிணைத்துள்ளது. இந்தத் தளத்தில் குறு சிறு நிறுவனங்கள், புத்தொழில் நிறுவனங்கள், பெண்கள் தலைமையிலான வணிக நிறுவனங்கள், எஸ்சி/எஸ்டி நிறுவனங்கள் மற்றும் சுயஉதவிக் குழுக்களும் பதிவு செய்துள்ளன.

இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய ஜெம் தளத்தின் தலைமைச் செயல் அதிகாரி திரு மிஹிர் குமார் இந்தத் தளத்தில் கையாளப்படும் வர்த்தக ரீதியிலான சரக்குகளின் மதிப்பு 15 லட்சம் கோடி ரூபாயை கடந்து சாதனை செய்துள்ளது. பல்வேறு தரப்பினரின் நம்பிக்கையை எடுத்துக்காட்டுவதாக உள்ளது என்று கூறினார்.  எளிதான நடைமுறைகள், புதிய கண்டுபிடிப்புகள் போன்றவை இத்தளத்தின் வளர்ச்சிக்கு பல்வேறு வகையில் உதவுவதாக அவர் கூறினார்.  அரசின் கொள்முதல் நடவடிக்கைகளில் வெளிப்படை தன்மை, பொறுப்புணர்வு மற்றும் டிஜிட்டல் அதிகாரம் ஆகியவை வளர்ச்சியடைந்த இந்தியா விற்பனை இலக்குகளை எட்ட உதவிடும் என்று அவர் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2160553

***

AD/SV/AG/DL


(Release ID: 2160651)