பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஸ்ரீ குரு கிரந்த் சாஹிப்-ன் பர்காஷ் புராப் புனித நிகழ்வை முன்னிட்டு பிரதமர் வாழ்த்து

இடுகை இடப்பட்ட நாள்: 24 AUG 2025 1:02PM by PIB Chennai

ஸ்ரீ குரு கிரந்த் சாஹிப்-ன் புனித பர்காஷ் புராப் தினத்தை (பிறந்த தினம்முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி தமது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீ குரு கிரந்த் சாஹிப்-ன் காலத்தால் அழியாத போதனைகள் உலகம் முழுவதும் உள்ள மக்களின் வாழ்க்கையை தொடர்ந்து ஒளிரச் செய்து, இரக்கம், பணிவு, சேவை ஆகிய மதிப்புகளை நமக்கு நினைவூட்டுகின்றன என்று பிரதமர் கூறியுள்ளார். இந்த போதனைகள் ஒற்றுமையையும் நல்லிணக்க உணர்வையும் வலுப்படுத்த மனிதகுலத்தை ஊக்குவிக்கின்றன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீ குரு கிரந்த் சாஹிப் காட்டிய ஞானப் பாதையில் நாம் எப்போதும் நடந்து, சிறந்த பூமியை உருவாக்க பாடுபடுவோம் என்று பிரதமர் கூறியுள்ளார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

ஸ்ரீ குரு கிரந்த் சாஹிப் ஜி-ன் பர்காஷ் புராப் புனித நிகழ்வையொட்டி அன்பான வாழ்த்துகள்.

ஸ்ரீ குரு கிரந்த் சாஹிப் ஜியின் காலத்தால் அழியாத போதனைகள், உலகம் முழுவதும் உள்ள மக்களின் வாழ்க்கையை ஒளிரச் செய்து, இரக்கம், பணிவு, சேவை ஆகிய மதிப்புகளை நமக்கு நினைவூட்டுகின்றன. இந்த போதனைகள் ஒற்றுமையையும் நல்லிணக்கத்தின் உணர்வையும் வலுப்படுத்த மனிதகுலத்தை ஊக்குவிக்கின்றன.

ஸ்ரீ குரு கிரந்த் சாஹிப் ஜி காட்டிய ஞானப் பாதையில் நாம் எப்போதும் நடந்து, சிறந்த பூமியை உருவாக்க பாடுபடுவோம்."

***

(Release ID: 2160275)

AD/PLM/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2160318) வருகையாளர் எண்ணிக்கை : 16