மக்களவை செயலகம்
மக்களவை முன்னாள் தலைவர் டாக்டர் பல் ராம் ஜாக்கர் பிறந்தநாளில் நாடாளுமன்ற மைய மண்டபத்தில் அவரது உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தப்பட்டது
Posted On:
23 AUG 2025 1:26PM by PIB Chennai
மக்களவை முன்னாள் தலைவர் டாக்டர் பல் ராம் ஜாக்கர் பிறந்தநாளில் நாடாளுமன்ற மைய மண்டபத்தில் அவரது உருவப்படத்திற்கு இன்று மரியாதை செலுத்தப்பட்டது. மாநிலங்களவை துணைத்தலைவர் திரு ஹரிவன்ஷ்; நாடாளுமன்ற உறுப்பினர்கள்; முன்னாள் உறுப்பினர்கள்; மக்களவை பொதுச்செயலாளர் திரு உத்பல் குமார் சிங் ஆகியோர் டாக்டர் ஜாக்கருக்கு மரியாதை செலுத்தினர். மக்களவை மற்றும் மாநிலங்களவை செயலகங்களின் மூத்த அதிகாரிகளும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.
1980 ஜனவரி 22 அன்று ஏழாவது மக்களவையின் தலைவராக டாக்டர் பல் ராம் ஜாக்கர் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1985 ஜனவரி 15 வரை அப்பதவியில் தொடர்ந்தார். 1985 ஜனவரி 16 அன்று எட்டாவது மக்களவையின் தலைவராக மீண்டும் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் 1989 டிசம்பர் 18 வரை முழு பதவிக்காலத்திற்கும் அவர் பதவி வகித்தார். சுதந்திர இந்தியாவில் தொடர்ச்சியாக இரண்டு மக்களவைகளுக்கு முழு பதவிக் காலம் தலைமை தாங்கிய ஒரே மக்களவைத் தலைவர் என்ற தனித்துவமான பெருமையை டாக்டர் ஜாக்கர் பெற்றார். ஒரு விவசாய குடும்பத்தைச் சேர்ந்த டாக்டர் ஜாக்கர், 1991 முதல் 1996 வரை பத்தாவது மக்களவையின்போது மத்திய வேளாண் அமைச்சராகவும் பணியாற்றினார். டாக்டர் ஜாக்கர் 2016, பிப்ரவரி 3 அன்று காலமானார்.
டாக்டர் பல் ராம் ஜாக்கரின் உருவப்படத்தை அப்போதைய குடியரசுத் தலைவர் திரு பிரணாப் முகர்ஜி 2014, பிப்ரவரி 10 அன்று திறந்துவைத்தார்.
*****
(Release ID: 2160065)
AD/SMB/SG
(Release ID: 2160127)