மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்
azadi ka amrit mahotsav

செமிகண்டக்டர் வடிவமைப்பில் புதுமைக்கு அரசு ஊக்குவிப்பு

Posted On: 22 AUG 2025 2:29PM by PIB Chennai

நாட்டின் செமிகண்டக்டர் வடிவமைப்பு திறன்களை அதிகரிக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, வடிவமைப்புடன் இணைந்த  ஊக்கத்தொகை  திட்டத்தின் கீழ், 23 சிப்-வடிவமைப்பு திட்டங்களுக்கு மத்திய அரசு அனுமதித்துள்ளது. உள்நாட்டு புத்தொழில்  நிறுவனங்கள் மற்றும் சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களால்  வழிநடத்தப்படும் இந்தத் திட்டங்கள், கண்காணிப்பு கேமராக்கள், மின்சார  மீட்டர்கள், நுண்செயலி ஐபி-க்கள், நெட்வொர்க்கிங் பயன்பாடுகள் போன்ற பகுதிகளுக்கு உள்நாட்டு சிப்புகளை உருவாக்க ஆதரவைப் பெறுகின்றன. 72 நிறுவனங்கள் தங்கள் சிப் வடிவமைப்பு திட்டங்களுக்கான தரமான மின்னணு வடிவமைப்பு ஆட்டோமேஷன் கருவிகளை அணுகியுள்ளன.

2017-ல் நிறுவப்பட்ட வெர்வெசெமி என்ற முன்னணி நிறுவனம், விண்வெளி, பாதுகாப்பு, தொழில்துறையில் புத்தாக்கத்துக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.   மத்திய அரசின் வடிவமைப்புடன் இணைந்த ஊக்கத்தொகை  திட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட, செமிகண்டக்டர் புத்தொழில் நிறுவனத் திட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களின் முதல் குழுவில், வெர்வெசெமி சுய-நிலைத்தன்மையை வலுப்படுத்தும் மற்றும் புதுமைகளை வளர்க்கும் வடிவமைக்கப்பட்ட இந்தியாவில் சிப்புகளை உருவாக்க உறுதிபூண்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2159727

***

AD/PKV/DL


(Release ID: 2159870)