நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பள்ளி மாணவர்களுக்கான இளையோர் நாடாளுமன்ற போட்டியி்ல் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசு வழங்கும் நிகழ்ச்சி நாளை நடைபெறுகிறது

Posted On: 21 AUG 2025 2:23PM by PIB Chennai

2024-25-ம் ஆண்டுக்கான 57-வது இளையோர் நாடாளுமன்ற போட்டி பள்ளி மாணவர்களுக்கு இடையே கல்வித்துறை இயக்குநரகத்தால்  நடத்தப்பட்டது. இப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு நாளை (22.08.2025) புதுதில்லியில் நடைபெறும் நிகழ்ச்சியில், பரிசுகள் வழங்கப்பட உள்ளது. 

மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை இணையமைச்சர் திரு அர்ஜூன் ராம் மேக்வால் தலைமையில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் போட்டியில் சிறப்பான திறனை வெளிப்படுத்தி  வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட உள்ளது.

தில்லியிலுள்ள சர்வோதயா கன்யா வித்யாலயா பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள்  இளையோர் நாடாளுமன்ற போட்டியில்  முதலிடத்தைப் பெற்றுள்ளனர்.

கடந்த 59 ஆண்டுகளாக தலைநகர் தில்லியைச் சுற்றியுள்ள பகுதிகளில் அமைந்துள்ள பள்ளிகளில், இந்த இளையோர் நாடாளுமன்ற போட்டிகளை, மத்திய நாடாளுமனற் விவகாரத்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் கல்வித்துறை இயக்குநரகம் நடத்தி வருகிறது.

சுயஒழுக்கம், மாறுபட்ட கருத்துகள் மீதான சகிப்புத்தன்மை தனது கருத்துக்களை வெளிப்படுத்துவதற்கான உரிமை மற்றும் ஜனநாயக வழியிலான வாழ்வியல் முறை போன்ற அம்சங்களில் மாணவர்களிடையே ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் இந்தப் போட்டி நடத்தப்பட்டு வருகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2158993

-----

SS/SV/KPG/KR


(Release ID: 2159249)
Read this release in: Hindi , English , Urdu