கூட்டுறவு அமைச்சகம்
நாடு முழுவதும் 2 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் அதிகமான கிராமப் பஞ்சாயத்துகளில் தொடக்க வேளாண் கடன் சங்கங்கள் உள்ளன
இடுகை இடப்பட்ட நாள்:
20 AUG 2025 2:51PM by PIB Chennai
தேசிய கூட்டுறவு தரவு தளத்தின் அடிப்படையில் நாடு முழுவதும் மொத்தமுள்ள 2 லட்சத்து 69 ஆயிரத்து 230 கிராமப் பஞ்சாயத்துகளில் 2025, ஜூன் 30 நிலவரப்படி, 2 லட்சத்து 51 ஆயிரத்து 872 பஞ்சாயத்துகள் தொடக்க வேளாண் கடன் சங்கங்களைக் கொண்டுள்ளன.
நாடாளுமன்ற மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் பதிலளித்த மத்திய கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு அமித் ஷா இதனைத் தெரிவித்தார். எஞ்சியுள்ள 17,358 பஞ்சாயத்துகளில் தொடக்க வேளாண் கடன் சங்கங்களை அமைக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அவர் கூறினார்.
2021 ஜனவரி 01-க்கு பின் பல்வேறு மாநிலங்களில் மொத்தம் 7768 தொடக்க வேளாண் கடன் சங்கங்கள் அமைக்கப்பட்டதாகவும் இவற்றில் தமிழ்நாட்டில் 38 தொடக்க வேளாண் கடன் சங்கங்களும், புதுச்சேரியில் 4 தொடக்க வேளாண் கடன் சங்கங்களும் அடங்கும் என்றும் அவர் கூறினார்.
தேசிய பால்வள மேம்பாட்டுத் திட்டம், பிரதமரின் மீன்வள மேம்பாட்டுத் திட்டம் உள்ளிட்ட மத்திய அரசின் பல்வேறு திட்டங்கள் மூலமும் நபார்டு, தேசிய பால்வள மேம்பாட்டு வாரியம், தேசிய மீன்வள மேம்பாட்டு வாரியம் மற்றும் மாநிலங்கள் /யூனியன் பிரதேசங்களின் உதவியுடனும் 2 லட்சம் பன்னோக்கு தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களை அமைக்க 2023 பிப்ரவரி 15 அன்று மத்திய அரசு ஒப்புதல் அளித்தது என்று அமைச்சர் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2158335
***
AD/SMB/AG/KR
(வெளியீட்டு அடையாள எண்: 2158428)
வருகையாளர் எண்ணிக்கை : 23