மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்
பருவநிலை மாற்றத்தின் தாக்கங்களை எதிர்கொண்டு மீன் உற்பத்தியை அதிகரி்ப்பதற்கான நடவடிக்கைகள்
Posted On:
20 AUG 2025 1:53PM by PIB Chennai
நாட்டின் கடல்சார் மீன் உற்பத்தி தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இது கடந்த 2020-21-ம் ஆண்டில் 34.74 லட்சம் டன்னிலிருந்து 2023-24-ம் ஆண்டில் 44.95 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது. இதன் ஆண்டு சராசரி வளர்ச்சி விகிதம் 8.9 சதவீதமாக உயர்ந்துள்ளதாக இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் கடல்சார் மீன்வள ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் தாக்கங்கள் குறித்து அறிவியல் பூர்வ ஆய்வு நடவடிக்கைகளை இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கவுன்சில் தொடர்ந்து மேற்கொண்டு வருவதுடன், பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான நீடித்த மீன்வளம் மற்றும் மீன் உற்பத்திக்கான உத்திசார் நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. அசாம், மேற்கு வங்கம், பீகார், ஒடிசா மற்றும் கேரள மாநிலங்களில் உள்ள ஈர நிலங்களில் மீன் வளர்ப்புக்கான சூழல் குறித்த மதிப்பீடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முக்கிய ஆற்றுப் படுகைகளில் பருவநிலை மாற்றம் குறித்த பகுப்பாய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் மீன் விநியோகம், மீன் உற்பத்தி, மீன் பிடித்தல் போன்றவற்றில் ஏற்படும் தாக்கங்கள் குறித்த மதிப்பீடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த மாநிலங்களில் பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் தாக்கங்களை எதிர்கொண்டு, மீன்வளத்தை மேம்படுத்தும் வகையில், திறன் மேம்பாட்டுத் திட்டங்கள் மற்றும் விழிப்புணர்வு பிரச்சாரங்களும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இத்தகவலை மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்துள்ள பதிலில் மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணையமைச்சர் திரு ஜார்ஜ் குரியன் தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2158313
***
AD/SV/KPG/KR
(Release ID: 2158344)