சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
மற்ற மாநிலத்தில் இருந்து குடிபெயர்ந்தோருக்கு ஓ.பி.சி. சான்றிதழ்
Posted On:
19 AUG 2025 4:16PM by PIB Chennai
மற்ற மாநிலத்தில் இருந்து குடிபெயரும் ஒரு நபருக்கு, அவரது தந்தை எந்த மாநிலத்தைச் சேர்ந்தவரோ அந்த மாநிலத்தின் பரிந்துரைக்கப்பட்ட அதிகாரி அவரது தந்தைக்கு வழங்கிய செல்லத்தகுந்த சான்றிதழை சமர்ப்பித்தால், அந்த நபருக்கு இதர பிற்படுத்தப்பட்டோர் (ஓபிசி) சான்றிதழ் வழங்குகிறார். சான்றிதழ் வழங்குவதற்கு முன்பு தந்தை எந்த மாநிலத்தைச் சேர்ந்தவரோ அந்த மாநிலத்தில் விரிவான விசாரணை தேவையில்லை என்று பரிந்துரைக்கப்பட்ட அதிகாரி முடிவெடுத்தால் மட்டுமே அவர் ஒபிசி சான்றிதழை வழங்குவார்.
ஓபிசி பிரிவைச் சேர்ந்த நபர் தனது சொந்த மாநிலம் அல்லது யூனியன் பிரதேசத்தில் இருந்து மற்றொரு மாநிலம் அல்லது யூனியன் பிரதேசத்திற்கு குடிபெயர்ந்து அந்த மாநிலத்தில் அவருடைய சாதி ஓபிசி பட்டியலில் இல்லையென்றாலும் அவர் எந்த மாநிலத்தை சேர்ந்தவரோ அந்த மாநிலத்தின் ஓபிசி பிரிவினருக்கு உள்ள சலுகைகள் மற்றும் நலன்களையும் மத்திய அரசின் சலுகைகள் மற்றும் நலன்களை பெறுவதற்கு அவர் தகுதி உடையவராவார்.
இந்தத் தகவலை சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார் இன்று மக்களவையில் ஒரு எழுத்துப்பூர்வமான பதிலில் தெரிவித்தார்.
***
(Release ID: 2157942)
AD/TS/DL
(Release ID: 2158107)