சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பருவநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்கான தேசிய செயல் திட்டம்

प्रविष्टि तिथि: 18 AUG 2025 4:51PM by PIB Chennai

பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் சவால்களுக்குத் தீர்வு காணும் வகையில் மத்திய அரசு பல்வேறு முன்முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதில் கொள்கை, அளவீடுகள்,  திட்டங்களை செயல்படுத்துவதில் உரிய கவனம் செலுத்துவது, மீள்தன்மை கொண்ட கட்டமைப்பு மற்றும் சமூக பாதுகாப்பு உள்பட பல்வேறு நடவடிக்கைகள்  அடங்கும். வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகள் மற்றும் கடலோரப் பகுதிகளில் பருவநிலை மாற்றத்தைத் தாங்கும் வகையில், வீட்டுவதிகள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் முயற்சிகள் உட்பட பல முக்கிய செயல்பாடுகள் இதனுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.

பருநிலை மாற்றத்தால் ஏற்படும் தாக்கங்களைக் கட்டுப்படுத்தும் வகையில் பன்முகத் தன்மை கொண்ட உத்திசார் நடவடிக்கையாக பருவநிலை மாற்றத்திற்கான தேசிய செயல் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக நீடித்த வாழ்விடம் மீள்தன்மை கொண்ட கட்டமைப்புகள் போன்ற தேசிய அளவிலான நடவடிக்கைகள் மூலம் பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் பேரிடர் மற்றும் மிகவும் அபாயகரமான நிகழ்வுகளிலிருந்து பாதுகாத்துக் கொள்ளும் வகையிலும் இந்த நடவடிக்கைகள்  மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

பருவநிலை மாற்றத்தைத் தாங்கி வளரக்கூடிய வகையில், இந்திய வேளாண் துறையில்,  உத்திசார் நடவடிக்கைகள் நீடித்த  விவசாயத்திற்கான தேசிய இயக்கத்தின் கீழ் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இத்தகவலை மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்துள்ள பதிலில், மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்திற்கான இணையமைச்சர் திரு கீர்த்தி வர்தன் சிங் தெரிவித்துள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2157522

-----

 

AD/SV/KPG/DL


(रिलीज़ आईडी: 2157659) आगंतुक पटल : 20
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी