இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
தேசிய விளையாட்டு நிர்வாக மசோதா, 2025 மற்றும் தேசிய ஊக்கமருந்து தடுப்பு (திருத்தம்) மசோதா, 2025 நிறைவேற்றப்பட்டதற்கு விளையாட்டு வீரர்கள் பிரதமர் திரு நரேந்திர மோடிக்குப் புகழாரம்
Posted On:
14 AUG 2025 4:30PM by PIB Chennai
இந்திய விளையாட்டு சமூகத்தினர், ஆகஸ்ட் 12, 2025 அன்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தேசிய விளையாட்டு நிர்வாக மசோதா, 2025 மற்றும் தேசிய ஊக்கமருந்து தடுப்பு (திருத்தம்) மசோதா, 2025 ஆகியவற்றை வரவேற்றுள்ளனர். விளையாட்டு வீரர்கள், பயிற்சியாளர்கள், விளையாட்டு நிர்வாகிகள் மற்றும் பலரும் நீண்ட காலம் எதிர்பார்த்திருந்த விளையாட்டு வீரர்களின் நலன்களைப் பாதுகாக்கும் மற்றும் நல்ல ஆளுகையைக் கொண்டுவரும் இந்த சீர்திருத்தங்களை வரவேற்றுள்ளனர்.
பேட்மின்ட்டன் நட்சத்திரம் லக்ஷயா சென் தனது எக்ஸ் வலைத்தளத்தில் இந்த சட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதற்கு தனது பராட்டுகளைத் தெரிவித்துள்ளார். “இது இந்திய விளையாட்டுக்கான வரலாற்றுத் தருணம். இரண்டு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ள விளையாட்டு மசோதா 2025 ஆளுகை, வெளிப்படைத் தன்மை, விளையாட்டு வீரர்களின் நல்வாழ்வு ஆகியவற்றில் புதிய தரநிலைகளை நிர்ணயிக்கின்றது. இதற்காக பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு நன்றி” என அவர் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் பாரா-ஜாவலின் விளையாட்டின் தற்போதைய பிரதிநிதியாக விளங்கும் சுமித் அன்ட்டில் சமூக ஊடக வலைத்தளத்தில், “விளையாட்டு மசோதா 2025 நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது என்பது விளையாட்டு நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையையும் நேர்மையையும் கொண்டு வரும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா தேசிய விளையாட்டு நிர்வாக மசோதா, 2025 நிறைவேற்றப்பட்டது என்பது சுதந்திரத்திற்குப் பிறகு விளையாட்டுத் துறையில் மேற்கொள்ளப்பட்ட ஒரே மிகப்பெரும் சீர்திருத்தமாக விளங்குகிறது எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்திய பாரா-பேட்மிண்டன் வீரரான சுகந்த் கடம், “தேசிய விளையாட்டு நிர்வாக மசோதா 2025 என்பது மதிப்பிற்குரிய பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையான தேசிய விளையாட்டுக்கள் கூட்டமைப்புகளின் நிபுணத்துவம், கணக்குத் தணிக்கை மற்றும் விதிகளின்படி செயல்படுதல் ஆகியவற்றிற்கு உயிர் அளித்துள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார்.
அனைத்திந்திய கால்பந்து கூட்டமைப்பின் தலைவர் கல்யாண் சௌபே நாற்பது ஆண்டுகளுக்குப் பிறகு இந்த மசோதாவைக் கொண்டு வந்ததற்காக மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவிற்கு பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளார். நம் நாடு மிகப்பெரும் சர்வதேச விளையாட்டுப் போட்டியை நடத்தும்போது நமது விளையாட்டு வீரர்கள் தூய்மையானவர்கள் என்பதை இந்தச் சட்டம் உறுதி செய்யும் என அவர் மேலும் தெரிவித்து உள்ளார்.
இந்திய டேவிஸ் கோப்பை கேப்டன் ரோஹித் ரஜ்பால் இந்திய விளையாட்டுக்களில் அதிகம் தேவைப்பட்ட சீர்திருத்தமாக இது இருக்கிறது என்றும் விளையாட்டுகளின் அபிவிருத்தியில் இந்த மசோதா மிகப்பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மசோதாவின் முக்கியமான அம்சங்களில் ஒன்றாக பாதுகாப்பான விளையாட்டுக் கொள்கை உள்ளது. இது விளையாட்டு வீரர்கள் பாதுகாப்பு சட்ட வரைவுகளை கடைப்பிடித்தல், குறைதீர்ப்பு அமைப்பை செயல்படுத்துதல் மற்றும் குறிப்பாக பெண்கள், மாற்றுத்திறனாளிகள் துன்புறுத்தலுக்கு ஆட்படுவதற்கு எதிராக பாதுகாப்பு அளித்தல் ஆகியவற்றை கட்டாயமாக்கி உள்ளது.
பாராலிம்பிக்ஸ் விளையாட்டுகளின் இரண்டு பதிப்புகளில் 3 பதக்கங்களை வென்ற அவானி லெக்கேரா இரண்டு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட விளையாட்டு மசோதாவானது பெண்கள் மற்றும் பாரா விளையாட்டு வீரர்களுக்கு பாதுகாப்பு, கண்ணியம் மற்றும் சமமான வாய்ப்புகளை உறுதி செய்கிறது என்றும் இதற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி என்றும் தெரிவித்து உள்ளார்.
ஊக்க மருந்து தடுப்பு கமிட்டியின் தலைவரான ரோகித் ராஜ்பால் ஊக்க மருந்து தடுப்பு (திருத்தம்) மசோதாவானது இந்தியாவில் விளையாட்டுகளில் மிகப்பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும் பூசல்களை விரைந்து தீர்க்கும் என்றும் தெரிவித்து உள்ளார்.
****
(Release ID: 2156401)
SS/TS/ RJ
(Release ID: 2156727)