ஆயுஷ்
சுதந்திர தின விழாவில் விவசாயிகள், யோகக் கலைப் பயிற்சியாளர்கள் பங்கேற்பதற்கான ஆயுஷ் அமைச்சகத்தின் சிறப்பு அழைப்பு
Posted On:
14 AUG 2025 5:37PM by PIB Chennai
யோகா மற்றம் மூலிகைத் தாவர சாகுபடியில் அத்துறையினர் அளித்து வரும் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில், சர்வதேச யோகா தினக் கொண்டாட்டங்களில் பங்கேற்ற 100 யோகக் கலை தன்னார்வல பயிற்சியாளர்களுக்கும், வேளாண் பாதுகாப்பில் சிறப்பாக செயலாற்றிய 100 விவசாயிகளுக்கும் ஆயுஷ் அமைச்சகம் சிறப்பு அழைப்பு விடுத்துள்ளது. மூலிகைத் தாவரங்களின் மேம்பாடு மற்றும் நீடித்த மேலாண்மையில் பங்காற்றிய விவசாயிகளுக்கு இந்த சிறப்பு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதிலுமிருந்து அழைக்கப்பட்டுள்ள இந்த சிறப்பு அழைப்பாளர்கள் செங்கோட்டையில் நடைபெறும் 79-வது சுதந்திர தின நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர்.
புதுதில்லியில் சுதந்திர தின விழாவின் போது நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக வந்துள்ள அனைத்து சிறப்பு அழைப்பாளர்களையும் அன்புடன் வரவேற்பதாக மத்திய ஆயுஷ் அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மத்திய ஆயுஷ் துறை இணையமைச்சர் திரு பிரதாப் ராவ் ஜாதவ் எழுதியுள்ள கடிதத்தில், அர்ப்பணிப்பு உணர்வுடன் செயலாற்றி வரும் நமது விவசாயிகளுக்கு மனமார்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார். விவசாயிகள் நமது நாட்டின் வளர்ச்சிக்கு முதுகெலும்பாக உள்ளனர் என்றும் அதில் குறிப்பிட்டுள்ளார்.
சுகாதாரம், நல்லிணக்கம் மற்றும் மனதை வலுப்படுத்துவதற்கு தொடர்ந்து நமக்கு வழிகாட்டி வரும் யோகக் கலை நிபுணர்களுக்கும் தனது பாராட்டுதல்களை தெரிவித்துக் கொண்டுள்ளார். வளமான மற்றும் தற்சார்பு இந்தியாவிற்கான அர்ப்பணிப்பு உணர்வுடன் தங்களது பங்களிப்புகள் தொடர வேண்டும் என்று அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.
***
(Release ID: 2156460 )
SS/SV/KPG/RJ/DL
(Release ID: 2156552)