குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்
தேசிய சிறுதொழில்கள் கழகமானது எம்.எஸ்.எம்.இ கடன்வசதி திட்டத்தின்கீழ் பல்வேறு தனியார் வங்கிகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளது
Posted On:
14 AUG 2025 2:03PM by PIB Chennai
குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்களுக்கு போதுமான அளவில் கடன்வசதி கிடைப்பதற்கு உதவுதல் என்ற குறிக்கோளை செயல்படுத்தும் வகையில் தேசிய சிறுதொழில் கழகமானது (என்.எஸ்.ஐ.சி) ஆக்சிஸ் வங்கி, தனலட்சுமி வங்கி, கர்னாடகா வங்கி, இண்டஸ்இந்த் வங்கி போன்ற பல்வேறு தனியார் வங்கிகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை 11 ஆகஸ்ட் 2025 அன்று மேற்கொண்டது.
இந்த நிகழ்வில் மத்திய அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் அமைச்சர் திரு ஜித்தன் ராம் மஞ்சி மற்றும் அந்த அமைச்சகத்தின் செயலாளர் திரு எஸ்.சி.எல்.தாஸ் கலந்து கொண்டனர். புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் தேசிய சிறுதொழில் கழக இயக்குனர் (நிதி) திரு. கவுரவ் குலாட்டி மற்றும் பல்வேறு வங்கிகளின் உயர் அதிகாரிகளுக்கு இடையில் பரிமாறிக் கொள்ளப்பட்டன.
இந்த ஒத்துழைப்பானது எம்.எஸ்.எம்.இ-க்களுக்கு பரஸ்பர உதவியை நீட்டிப்பதையும் முறையான நிதி அமைப்புகளுடன் அவற்றை இணைக்க உதவுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. தகுதிவாய்ந்த குறு மற்றும் சிறு தொழில்களுக்கு வங்கிகள் தங்கள் உதவியை அளிப்பதில் கூடுதல் கவனம் செலுத்த இது உதவும். கடைக்கோடி மக்களையும் சென்றடைய வேண்டுமென்ற வங்கிகளின் முயற்சிகளுக்கு இந்த ஏற்பாடு உந்துதலை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
***
(Release ID: 2156327)
SS/TS/RJ/DL
(Release ID: 2156524)