குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஆர்ஏஎம்பி திட்டத்தின் கீழ் டிஜிட்டல் மற்றும் மின்னணு வர்த்தக ஆதரவுடன் எம்எஸ்இ-களுக்கு அதிகாரம் அளிக்கும் எம்எஸ்எம்இ அமைச்சகம்

Posted On: 11 AUG 2025 5:10PM by PIB Chennai

உலக வங்கியின்  ஆதரவுடன் "சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் செயல்திறனை அதிகரித்தல் மற்றும் துரிதப்படுத்துதல் (RAMP)" திட்டத்தின் கீழ் ஒரு துணைத் திட்டமான 'எம்எஸ்இ டீம் (வர்த்தக செயல்படுத்தல் மற்றும் சந்தைப்படுத்தல்)' முயற்சியை எம்எஸ்எம்இ அமைச்சகம் செயல்படுத்தி வருகிறது. இந்த முயற்சி, டிஜிட்டல் கருவிகள் மற்றும் வழிகாட்டுதல்களுடன் குறு மற்றும் சிறு நிறுவனங்களை (MSEs) மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. டிஜிட்டல் வர்த்தகத்திற்கான திறந்த வலையமைப்புடன் (ONDC) அவற்றை ஒருங்கிணைப்பதன் மூலம் மின்னணு வர்த்தக சந்தையை திறம்பட பயன்படுத்த இது உதவும். இது எம்எஸ்எம்இகள் தங்கள் வாடிக்கையாளர் தளத்தை விரிவுபடுத்தவும், வருமானத்தை அதிகரிக்கவும் உதவும். எம்எஸ்இகளுக்கு ஆன்போர்டிங், டிஜிட்டல் பட்டியல், கணக்கு மேலாண்மை, போக்குவரத்து & தளவாடங்கள் மற்றும் பேக்கேஜிங் ஆகியவற்றில் ஆதரவு மற்றும் உதவி வழங்கப்படும். இந்த முயற்சி பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டிற்கான உள்ளமைக்கப்பட்ட கூறுகளைக் கொண்டுள்ளது.

 

எம்எஸ்எம்இ அமைச்சகத்தின் இ காதி இந்தியா (eKhadi India) வலைத்தளம்:  இந்த மின்னணு வர்த்தக தளம் ஆடை, மளிகை, அழகுசாதனப் பொருட்கள், வீட்டு அலங்காரம், சுகாதாரம் மற்றும் நல்வாழ்வு பொருட்கள், அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் பரிசுகள் உள்ளிட்ட காதி மற்றும் கிராமத் தொழில் தயாரிப்புகளை பிரத்தியேகமாகக்  கொண்டுள்ளது. இது கைவினைஞர்கள்/ நெசவாளர்கள் மற்றும் சிறு மற்றும் குறு நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளை இந்த வலைத்தளம் மூலம் நேரடியாக விற்பனை செய்ய உதவுகிறது. உண்மையான காதி வர்த்தக முத்திரை தயாரிப்புகள் இந்தத் தளம் மூலம் கிடைக்கின்றன. இந்தத் தளம் அரசு மின்னணு  சந்தையுடன் (GeM) ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.

 

எம்எஸ்எம்இ  குளோபல் மார்ட்: எம்எஸ்எம்இ குளோபல் மார்ட் என்பது குறு, சிறு, நடுத்தர தொழில்நிறுவனங்கள் அமைச்சகத்தின் வர்த்தகங்களுக்கு இடையேயான (B2B) இணையவழி சந்தை தளமாகும், இது தேசிய சிறு தொழில்கள் கழகத்தால் (NSIC) இயக்கப்படுகிறது. இது எம்எஸ்எம்இகளை உள்நாட்டு மற்றும் உலகளாவிய வாங்குபவர்களுடன் இணைப்பதன் மூலம் அவர்களின் சந்தைப்படுத்தல் முயற்சிகளை ஆதரிக்கிறது.

 

கொள்முதல் மற்றும் சந்தைப்படுத்தல் ஆதரவு (PMS) திட்டம்: இந்தத் திட்டம் வர்த்தக கண்காட்சிகள், கண்காட்சிகள், வாங்குபவர்கள்-விற்பனையாளர்கள் சந்திப்புகள் போன்றவற்றில் எம்எஸ்எம்இகள் பங்கேற்பதை எளிதாக்குவதன் மூலம் அவர்களுக்கான சந்தை அணுகலை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. வருடாந்திர உறுப்பினர் கட்டணம்/சந்தா கட்டணம்/பட்டியல் செலவு போன்றவற்றுக்கு நிதி உதவி வழங்குவதன் மூலம் எம்எஸ்எம்இ குளோபல் மார்ட்டில் குறு நிறுவனங்களை இணைப்பதற்கு இது ஆதரவளிக்கிறது.

 

இந்தத் தகவலை குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறை இணையமைச்சர் திருமிகு  ஷோபா கரந்தலஜே இன்று மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்தார்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2155091

***

(Release ID: 2155091)

AD/RB/DL


(Release ID: 2155310)
Read this release in: English , Urdu