பாதுகாப்பு அமைச்சகம்
இந்தியா-இலங்கை கடலோரக் காவல்படை பிரதிநிதிகள் பங்கேற்ற உயர்நிலைக் கூட்டம் புதுதில்லியில் நடைபெற்றது
प्रविष्टि तिथि:
11 AUG 2025 5:31PM by PIB Chennai
இந்திய கடலோரக் காவல்படை, இலங்கை கடலோரக் காவல்படை இடையேயான கடல்சார் கூட்டாண்மையின் மற்றொரு மைல் கல்லாக இருநாட்டு கடலோரக் காவல்படையினருக்கு இடையேயான 8-வது உயர்நிலைக் கூட்டம் 2025 ஆகஸ்ட் 11 அன்று புதுதில்லியில் நடைபெற்றது. திறன் மேம்பாடு, தொழில்நுட்ப உதவி முன்முயற்சிகள் ஆகியவற்றுடன் கடல் மாசுபாட்டை எதிர்கொள்ளுதல், கடல்பகுதியில் தேடல் மற்றும் மீட்புப்பணி, கடல் சட்டத்தை அமல்படுத்துதல் ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது.
இலங்கை சார்பில் இலங்கை கடலோரக் காவல்படை தலைமை இயக்குநர் ரியர் அட்மிரல் ஒய் ஆர் சிரசிங்கே தலைமையிலும், இந்தியா சார்பில் இந்திய கடலோரக் காவல்படை தலைமை இயக்குநர் பரமேஷ் சிவமணி தலைமையிலும் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். இலங்கை கடலோரக் காவல்படை பிரதிநிதிகள் இந்தியாவில் ஆகஸ்ட் 10 முதல் 14-ம் தேதி வரை பயணம் மேற்கொள்கின்றனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2155115
***
AD/IR/AG/DL
(रिलीज़ आईडी: 2155235)
आगंतुक पटल : 6