நிலக்கரி அமைச்சகம்
நிலையான சுரங்க நடைமுறைகள் மற்றும் சுற்றுச்சூழல் மேலாண்மை
Posted On:
11 AUG 2025 2:50PM by PIB Chennai
நிலையான நிலக்கரி சுரங்க நடைமுறைகளை மேம்படுத்த வேண்டுமென்பதில் நிலக்கரி அமைச்சகம் அர்ப்பணிப்புடன் உள்ளது. இந்திய நிலக்கரி நிறுவனம் (சி.ஐ.எல்), என்.எல்.சி இந்தியா நிறுவனம் மற்றும் சிங்கரேணி நிலக்கரிச் சுரங்க நிறுவனம் போன்ற நிலக்கரி மற்றும் பழுப்பு நிலக்கரி பொதுத்துறை நிறுவனங்கள் நிலையான சுரங்க நடைமுறைகளை செயல்படுத்தி வருகின்றன. நிலத்தடி மற்றும் திறந்தநிலை சுரங்கங்களுக்கான அதிநவீன தொழிழ்நுட்பங்களை அதாவது மேற்பரப்பு சுரங்கப்பணி இயந்திரம், எக்சென்ட்ரிக் பிளவு இயந்திரம், ஆளில்லா ரிமோட் மூலம் இயக்கப்படும் கருவி ஆகியவற்றை இந்நிறுவனங்கள் பயன்படுத்தி வருகின்றன. முதல் மைல் இணைப்பு என்ற செயல்திட்டங்கள் சாலைப் போக்குவரத்தைக் குறைக்கவும் காற்றின் மாசைக் குறைக்கவும், தூசு உற்பத்தியைக் கட்டுப்படுத்தவும் உதவுகின்றன.
அங்கீகரிக்கப்பட்ட சுரங்கம் மற்றும் சுற்றுச்சூழல் மேலாண்மை திட்டங்களின்படி இந்த பொதுத்துறை நிறுவனங்கள் உயிரி-மறுசீரமைப்பு மற்றும் காடு வளர்ப்பு முன்முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. நிலக்கரி தோண்டி எடுக்கப்பட்ட நிலப்பகுதிகள், குப்பைமேடுகள் மற்றும் ஏனைய வளங்குன்றிய நிலப்பகுதிகள் ஆகியவற்றை படிப்படியாக சீரமைக்கும் பணியும் வனமாக்கும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருவதோடு பல்லடுக்கு தோட்டங்களை அமைத்தல், விதைப்பந்து தொழில்நுட்பத்தை பயன்படுத்துதல், விதைப்பதற்கு ட்ரோன்களைப் பயன்படுத்ததல் போன்ற அறிவியல்ரீதியான சீரமைப்பு முறைகளும் கடைபிடிக்கப்படுகின்றன. 2019-20 நிதியாண்டு முதல் 2024-25 நிதியாண்டு வரை நிலக்கரி சுரங்கங்கள் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் 13,400 ஹெக்டேர் நிலப்பரப்பில் லட்சக்கணக்கான மரக்கன்றுகள் நட்டு பசுமையாக்கல் முயற்சியை இந்தப் பொதுத்துறை நிறுவனங்கள் மேற்கொண்டு வருகின்றன.
2025-26 நிதியாண்டில் இந்திய நிலக்கரி நிறுவனம்(சி.ஐ.எல்) திறந்தவெளி சுரங்கங்கள் மூலம் 537.92 மில்லியன் டன் நிலக்கரியையும் நிலத்தடி சுரங்கங்களில் இருந்து 23.63 மில்லியன் டன் நிலக்கரியையும் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளது. இதே நிதியாண்டில் நிலக்கரி மற்றும் பழுப்பு நிலக்கரி பொதுத்துறை நிறுவனங்கள் சுரங்கப் பகுதிகள் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள் என மொத்தமாக 2800 ஹெக்டேர் நிலப்பரப்பில் மரக்கன்றுகள் நட்டு வளர்க்க இலக்கு நிர்ணயித்துள்ளன.
இந்தத் தகவலை மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கங்கள் அமைச்சர் திரு ஜி.கிஷன் ரெட்டி மாநிலங்களவையில் இன்று எழுத்துப்பூர்வமான அளித்த பதிலில் தெரிவித்தார்.
***
(Release ID: 2155005)
AD/TS/SG
(Release ID: 2155072)