பாதுகாப்பு அமைச்சகம்
முப்படைகளுக்கு இடையிலான ஒருங்கிணைப்பு மற்றும் செயல்பாட்டு ஒற்றுமைக்கு ஆபரேஷன் சிந்தூர் ஒரு சான்றாகும் பாதுகாப்புப் படைத் தலைவர்
Posted On:
10 AUG 2025 10:02AM by PIB Chennai
‘ஆபரேஷன் சிந்தூர்’ வெற்றியை முப்படைகளுக்கு இடையிலான ஒருங்கிணைப்பு மற்றும் செயல்பாட்டு ஒற்றுமைக்கு ஒரு எடுத்துக்காட்டு என்று பாதுகாப்புப் படைத் தலைவர் ஜெனரல் அனில் சவுகான் விவரித்தார். செகந்திராபாத்தில் உள்ள பாதுகாப்பு மேலாண்மை கல்லூரியில் 21வது உயர் பாதுகாப்பு மேலாண்மை பாடநெறி மாணவர்கள் மற்றும் மூத்த அதிகாரிகளிடம் உரையாற்றிய பாதுகாப்புப் படைத் தலைவர், ஆயுதப்படைகளில் கூட்டு மற்றும் ஒருங்கிணைப்பு குறித்த உத்திசார் கண்ணோட்டங்களைப் பகிர்ந்து கொண்டார். மேலும் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளின் எதிர்கால கண்ணோட்டத்தை வடிவமைப்பதற்கான முக்கிய அம்சங்களை எடுத்துரைத்தார்.
தொழில்நுட்பம் சார்ந்த நவீன போரில் ஏற்படும் சிக்கலான மாற்றங்களைச் சமாளிக்க இராணுவத்தில் பின்பற்றப்படும் வியக்கத்தக்க மாற்றங்கள் குறித்த விரிவான திறன் மேம்பாடு, சுயசார்பு மற்றும் ஆழமான புரிதலின் முக்கியத்துவத்தை ஜெனரல் அனில் சவுகான் வலியுறுத்தினார்.
பாதுகாப்புப் படைத் தலைவர் 'தேசிய பாதுகாப்பு கட்டமைப்பு மற்றும் உயர் பாதுகாப்பு மேலாண்மை' என்ற தலைப்பில் ஒரு தனிச்சிறப்பான உரையை நிகழ்த்தினார். இந்தியாவின் பாதுகாப்பு அமைப்பின் பரிணாமம் மற்றும் தற்போதைய கட்டமைப்பு ஆகியவற்றை அவர் கோடிட்டுக் காட்டினார். இராணுவ விவகாரத் துறையின் சாதனைகள், முடிவெடுக்கும் முக்கியமான தேசிய பாதுகாப்பு குழுக்களின் செயல்பாடு, நிறுவன மறுசீரமைப்பு உள்ளிட்ட சீர்திருத்தங்களை செயல்படுத்துதல் மற்றும் கூட்டுத் திறனை மேம்படுத்துவதற்கான முன்னோடித் திட்டங்கள் ஆகியவற்றை அவர் எடுத்துரைத்தார். தொடர்ச்சியான சீர்திருத்தங்களின் முக்கியத்துவம், வளர்ந்து வரும் தேசிய பாதுகாப்பு சவால்களைச் சந்திக்க தேவையான ஒருங்கிணைப்பு மற்றும் தகவமைப்புத் திறன் ஆகியவற்றை இந்த உரை சுட்டிக் காட்டியது.
*****
(Release ID: 2154796)
AD/SM/SG
(Release ID: 2154814)