பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மின்-ஆளுமைக்கான தேசிய விருதுகள் 2026 திட்டத்தை மத்திய நிர்வாக சீர்திருத்தங்கள் துறை அறிவிக்கிறது

Posted On: 09 AUG 2025 12:17PM by PIB Chennai

23வது தேசிய மின்-ஆளுமை விருதுகள் (NAeG) 2026க்கான திட்டம், ஏழு பிரிவுகளின் கீழ் 16 விருதுகள் மூலம் மின்-ஆளுமை முயற்சிகளை செயல்படுத்துவதில் சிறந்து விளங்குவதை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

23-வது தேசிய மின்-ஆளுமை விருதுகள்-2026-க்கான திட்ட வழிகாட்டுதல்களை மத்திய நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் பொது மக்கள் குறைதீர்வுத் துறை வெளியிட்டுள்ளது. மின்-ஆளுமைக்கான தேசிய விருதுகளுக்கான பரிந்துரைகளை செப்டம்பர் 1, 2025 முதல் http://www.nceg.gov.in என்ற இணைய தளத்தில்  சமர்ப்பிக்கலாம். விண்ணப்பத்தைச் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி அக்டோபர் 15, 2025 ஆகும்.

மின்-ஆளுமை முயற்சிகளை செயல்படுத்துவதில் சிறந்து விளங்குபவர்களை கௌரவிப்பதற்கும் ஊக்குவிப்பதற்கும் ஆண்டுதோறும் தேசிய மின்-ஆளுமை விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்த விருதுகள் குறிப்பிடத்தக்க சாதனைகளை அங்கீகரிக்கவும், பயனுள்ள நடைமுறைகளைப் பகிர்ந்து கொள்வதை வளர்க்கவும், டிஜிட்டல் நிர்வாகத்தில் புதுமைகளை ஊக்குவிக்கவும் முயல்கின்றன.

மின்னணு ஆளுகைக்கான தேசிய விருதுகள் 2026-க்கான பரிந்துரைகளை 7 பிரிவுகளின் கீழ் சமர்ப்பிக்கலாம்:

 ஒரு கோப்பை, ஒரு சான்றிதழ், ஒவ்வொரு தங்க விருது பெறுபவருக்கும் ரூ 10 லட்சம் ஊக்கத்தொகை மற்றும் ஒவ்வொரு வெள்ளி விருது பெறுபவருக்கும் ரூ 5 லட்சம் ஊக்கத்தொகை ஆகியவற்றைக் கொண்டிருக்கும். 10 தங்க விருதுகள் மற்றும் 6 வெள்ளி விருதுகள் உட்பட மொத்தம் 16 விருதுகள் வழங்கப்படும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2154582

*****

 

 

(Release ID: 2154582)

AD/SM/PKV/SG

 


(Release ID: 2154614)