சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
தேசிய ஆரோக்கிய நிதியின் கீழ் சுகாதார அமைச்சரின் புற்றுநோய் நோயாளிகள் நிதியத்தின் வாயிலாக ஏழை புற்றுநோய் நோயாளிகளுக்கு ₹15 லட்சம் வரை நிதி உதவி வழங்கப்படுகிறது
Posted On:
08 AUG 2025 4:49PM by PIB Chennai
தேசிய ஆரோக்கிய நிதித் திட்டத்தின் கீழ் சுகாதார அமைச்சரின் புற்று நோயாளிகள் நிதியத்தின் வாயிலாக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மாநில/யூனியன் பிரதேச வாரியான வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ள (நேரடி விண்ணப்பம்) ஏழை நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்காக 15 லட்சம் ரூபாய் வழங்கப்படுகிறது. மேலும், தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் தரவுகளின் அடிப்படையில் தேசிய சுகாதார ஆணையத்தின் வலை தளத்தில் (ஆன்லைன் பயன்முறை) ஒருங்கிணைக்கப்பட்டுள்ள மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த ஏழை நோயாளிகளின் சிகிச்சைக்காகவும் இது வழங்கப்படுகிறது.
திட்டத்தின் கீழ் நிதி உதவிக்கு நோயாளிகள் நேரடியாக அல்லது ஆன்லைன் முறைகள் மூலம் விண்ணப்பிக்கலாம். தேசிய சுகாதார ஆணையத்தின் வலை தளத்தில் தரவு ஒருங்கிணைக்கப்படாத மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த நோயாளிகள் எந்த அரசு மருத்துவமனை மூலமாகவும் நேரடியாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். ஆன்லைன் பயன்முறைக்கு தேசிய சுகாதார ஆணையத்தின் வலை தளத்தில் தரவு ஒருங்கிணைக்கப்பட்டுள்ள மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுக்கு, அரசு மருத்துவமனைகளில் தேசிய ஆரோக்கிய நிதித் திட்டத்தின் கீழ் தகுதியான நோயாளியின் அடையாள அட்டை உருவாக்கப்படுகிறது. பின்னர், விண்ணப்பம் பரிவர்த்தனை மேலாண்மை அமைப்பு வாயிலாக அடுத்த கட்டத்திற்கு நகர்கிறது. ஒப்புதல் அளிக்கப்பட்டதும், நோயாளிக்கு நிதி ஒதுக்குவதற்கான உத்தரவு வங்கிக்கு அனுப்பப்பட்டு, சிகிச்சை தொடங்கும்.
தகுதியுள்ள நோயாளிகளுக்கான நிதி உதவி, சிகிச்சை பெறும் மருத்துவமனைகள் / நிறுவனங்களுக்கு வழங்கப்படுகிறது. ஆன்லைன் மற்றும் நேரடி விண்ணப்ப முறைகளில் நிதி ஒவ்வொரு தனிப்பட்ட நோயாளியின் அடிப்படையில் வெளியிடப்படுவதால், மாநில/யூனியன் பிரதேச வாரியான வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ள ஏழை நோயாளிகளின் தரவு ஒரே அமைப்பில் பராமரிக்கப்படுவதில்லை. 2024-25 ஆம் ஆண்டில் தேசிய ஆரோக்கிய நிதித் திட்டத்தின் கீழ் ரூ. 27.06 கோடி வழங்கப்பட்டது. 2025-2026 ஆம் ஆண்டில் (16.07.2025 வரை) இந்தத் திட்டத்தின் மூலம் மொத்தம் 134 ஏழை நோயாளிகள் பயனடைந்துள்ளனர். ரூ. 9.14 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது.
நேரடி விண்ணப்பங்கள் பரிந்துரைக்கப்பட்ட படிவத்தில் இருக்க வேண்டும், சிகிச்சை அளிக்கும் மருத்துவரால் முறையாக பரிந்துரைக்கப்பட்டு அரசு மருத்துவமனையின் மருத்துவ கண்காணிப்பாளரால் கையொப்பமிடப்பட வேண்டும். வருமானச் சான்றிதழ் மற்றும் குடும்பத்தின் ரேஷன் அட்டையுடன் தேசிய ஆரோக்கிய நிதித் திட்டத்தின் கீழ் நிதி உதவி பெற சமர்ப்பிக்கப்பட வேண்டும். ஆன்லைன் முறையில் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க அந்தியோதயா அன்ன யோஜனா ரேஷன் அட்டை மற்றும் ஆதார் அட்டை தேவை. தேசிய ஆரோக்கிய நிதித் திட்டத்தின் கீழ் விண்ணப்பத்தை ஆய்வு செய்தல், நிர்வாக மற்றும் நிதி ஒப்புதல்களுக்காக தொழில்நுட்பக் குழுவின் முன் விஷயத்தை சமர்பிப்பது உட்பட ஒவ்வொரு நோயாளியின் விண்ணப்ப செயல்முறை பல்வேறு கட்ட நடவடிக்கைகளை உள்ளடக்கியது.
பிராந்திய புற்றுநோய் மையங்கள் / மூன்றாம் நிலை பராமரிப்பு புற்றுநோய் மையங்கள், மாநில புற்றுநோய் நிறுவனங்கள் மற்றும் புற்றுநோய் சிகிச்சை வசதிகளைக் கொண்ட பிற அரசு மருத்துவமனைகள் / நிறுவனங்களில் நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்காக நிதி உதவி வழங்கப்படுகிறது.
தேசிய ஆரோக்கிய நிதித் திட்டம் பற்றிய கூடுதல் தகவல்களைப் பெற இந்த இணைப்பை அணுகவும்: https://mohfw.gov.in/?q=en/Major-Programmes/poor-patients-financial-support
மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திரு பிரதாப்ராவ் ஜாதவ் இன்று மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் இதனைத் தெரிவித்தார்.
-----
AD/SM/DL
(Release ID: 2154482)