பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்
75% பொது விநியோகத் திட்டப் பயனாளர்களுக்கு முகப்பதிவு அங்கீகாரம் வாயிலாக உணவு தானியங்கள் வழங்கும் நடைமுறை அறிமுகம்
இடுகை இடப்பட்ட நாள்:
08 AUG 2025 2:52PM by PIB Chennai
நியாய விலைக் கடைகள் மூலம் உணவு தானியங்கள், தொலைதூரப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு சென்றடைவதை உறுதி செய்யும் வகையில், நியாய விலைக்கடைகளில் பயனாளிகளின் முக அடையாள அங்கீகார நடைமுறை கடந்த ஜூலை 1-ம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டு வருகிறது. ஆதார் கடவுகளின் அடிப்படையில் பயனாளிகளின் விவரங்கள் சரிபார்க்கப்பட:டு அவர்களது முகப்பதிவு அங்கீகார நடைமுறை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. கடந்த 2024-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் சோதனை அடிப்படையில் தொடங்கப்பட்ட இந்தத் திட்டம் 2024-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் நாடு முழுவதிலும் அமல்படுத்தப்பட்டுள்ளது. நியாய விலைக் கடைகளில் உள்ள பணியாளர்களுக்கு இது குறித்த பயிற்சியும் வழங்கப்பட்டுள்ளது.
2025-ம் ஆண்டு ஆகஸ்ட் 5-ம் தேதி வரை மொத்தம் உள்ள 4.91 கோடி தகுதியுள்ள பயனாளிகளில் 3.69 கோடி பயனாளிகள் தங்களது முகப்பகுதி நடைமுறைகள் மின்னணு அடிப்படையிலான கேஒய்சி நடைமுறைகளைப் பின்பற்றி பதிவு செய்துள்ளனர்.
மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்துள்ள மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை இணையமைச்சர் திருமதி சாவித்ரி தாக்கூர் தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2154083
***
VL/SV/KPG/SG
(வெளியீட்டு அடையாள எண்: 2154261)
வருகையாளர் எண்ணிக்கை : 12