தேர்தல் ஆணையம்
azadi ka amrit mahotsav

பீகார் வரைவு வாக்காளர் பட்டியல் குறித்து எந்த அரசியல் கட்சியும் இதுவரை ஆட்சேபம் தெரிவிக்கவில்லை: தேர்தல் ஆணையம்

இடுகை இடப்பட்ட நாள்: 08 AUG 2025 10:56AM by PIB Chennai

பீகாரில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு முறை திருத்தம் மேற்கொள்ளப்பட்டு ஆகஸ்ட் 1 அன்று வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியல் குறித்து இதுவரை (ஆகஸ்ட் 8 காலை 9 மணி வரை) எந்த அரசியல் கட்சியும் ஆட்சேபம் தெரிவிக்கவில்லை, ஒரு உரிமை கோரல் கூட வரவில்லை என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து தேர்தல் ஆணையம் 2025 ஆகஸ்ட் 8 அன்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் தேசிய கட்சிகள் மற்றும் மாநில கட்சிகளுக்கு 1,60,813 வாக்குச் சாவடி நிலையிலான முகவர்கள் உள்ளனர் என்றும் இவர்கள் மூலமாக எந்த உரிமை கோரலோ, ஆட்சேபமோ கிடைக்கப்பெறவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

நேரடியாக 6,257 உரிமை கோரல் அல்லது ஆட்சேபம் பெறப்பட்டுள்ளதாகவும் 18 வயது பூர்த்தி அடைந்தவர்களிடம் இருந்து  36,060 படிவங்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும், விதிமுறைகளின்படி 7 நாட்கள் நிறைவடைந்த பின் இது குறித்து சம்பந்தப்பட்ட தேர்தல் அலுவலர் மூலம் முடிவெடுக்கப்படும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

பீகாரின் இறுதி வாக்காளர் பட்டியல் என்பது தகுதி வாய்ந்த வாக்காளர்கள் விடுபடாமலும் தகுதியில்லா வாக்காளர்கள் சேர்க்கப்படாமலும் இருக்கும் என தேர்தல் ஆணையம் மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வருகிறது.

****

(Release ID: 2154006)

VL/SMB/SG

 


(வெளியீட்டு அடையாள எண்: 2154089) வருகையாளர் எண்ணிக்கை : 30
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Bengali , Punjabi