கலாசாரத்துறை அமைச்சகம்
உள்நாட்டு மொழிகள் மற்றும் கலாச்சார பாரம்பரியத்தை பாதுகாப்பதற்கான மத்திய அரசின் நடவடிக்கைகள்
Posted On:
07 AUG 2025 4:17PM by PIB Chennai
நாட்டில் உள்ள மொழிகள் மற்றும் கலாச்சார பாராம்பரியங்களை பாதுகாப்பதை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.
மத்திய கலாச்சார அமைச்சகத்தின் கீழ் உள்ள தன்னாட்சி பெற்ற அமைப்பான சாகித்ய அகாடமி நாட்டில் உள்ள 24 இந்திய இலக்கியங்களை ஊக்குவிப்பதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளது. இந்த அமைப்பு உள்நாட்டு மொழிகளை ஊக்குவிப்பதிலும் அவற்றிலுள்ள இலக்கியங்களை பாதுகாப்பதற்குமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதில் அங்கீகாரம் பெற்ற மொழிகள் மட்டுமின்றி அங்கீகரிக்கப்படாத மற்றும் பழங்குடியின மொழிகளும் அடங்கும்.
நாட்டில் உள்ள பழங்குடியின மொழிகள் மற்றும் அங்கீகாரம் பெறாத மொழிகளை ஊக்குவிக்கும் வகையிலும் அவற்றை பாதுகாக்கும் வகையிலும் மொழிகளுக்கான வருவாய் ஆதரவு திட்டத்தின் கீழ் எழுத்தாளர்கள் மொழியியல் நிபுணர்கள், ஆராய்ச்சியாளர்கள் ஆகியோருக்கு நிதி உதவி வழங்கப்படுகிறது.
மேலும் பழங்குடியின மக்களின் இலக்கியங்கள் மற்றும் வழக்குமொழிகளை பாதுகாத்து ஊக்குவிக்கும் வகையில் அகர்தலா மற்றும் தில்லியில் இதற்கென பிரத்யேக மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
உள்நாட்டு மொழிகள் மற்றும் இலக்கியங்களை ஊக்குவிக்கும் வகையில் மாநில அளவிலான நிறுவனங்களுடன் இணைந்து மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய கலாச்சாரத் துறை அமைச்சர் திரு. கஜேந்திர சிங் ஷெகாவத் இதனைத் தெரிவித்துள்ளார்.
***
(Release ID: 2153609 )
AD/SM/SV/SG/KR/DL
(Release ID: 2153804)