சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம்
நோட்டரி வலைதளம் மற்றும் டிஜிட்டல் முறையிலான சட்ட நவீனமயமாக்கல்
Posted On:
07 AUG 2025 3:17PM by PIB Chennai
நோட்டரி சட்டம், 1952 மற்றும் நோட்டரி விதிகள், 1956 தொடர்பான சான்றளிப்பு பணிகளுக்கு ஆன்லைன் சேவைகளை வழங்குவதற்கான ஒரு பிரத்யேக தளமாக அரசு நோட்டரி வலைதளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. மத்திய அரசால் நியமிக்கப்பட்ட நோட்டரிகளுக்கு இடையே நோட்டரிகளாக நியமனம் செய்யப்படுவதற்கான விண்ணப்பங்களை சமர்ப்பித்தல், நோட்டரிகளாக நியமனம் செய்வதற்கான தகுதியை சரிபார்த்தல், நோட்டரியாக டிஜிட்டல் முறையில் கையொப்பமிடப்பட்ட பயிற்சி சான்றிதழை வழங்குதல், பயிற்சி சான்றிதழை புதுப்பித்தல், பயிற்சிப் பகுதியை மாற்றுதல், ஆண்டு வருமானத்தை சமர்ப்பித்தல் போன்ற பல்வேறு சேவைகளுக்கு ஒரு ஆன்லைன் இடைமுகத்தை வழங்கும் வகையில் நோட்டரி வலைதளம் உருவாக்கப்பட்டுள்ளது. நோட்டரி வலைதளம் நேரடித் தொடர்பற்ற, காகிதமற்ற, வெளிப்படையான மற்றும் திறன்மிகுந்த அமைப்பை வழங்குகிறது. தற்போது, ஆவணங்கள் தகுதி சரிபார்ப்பு மற்றும் புதிதாக நியமிக்கப்பட்ட நோட்டரிகளுக்கு டிஜிட்டல் முறையில் பதிவு செய்யப்பட்ட பயிற்சி சான்றிதழை வழங்குதல் தொடர்பான தொகுதி செயல்பாட்டில் உள்ளது.
31.07.2025-ம் தேதி நிலவரப்படி, பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் புதிதாக நியமிக்கப்பட்ட நோட்டரிகளுக்கு, 34,900-க்கும் மேற்பட்ட டிஜிட்டல் கையொப்பமிடப்பட்ட பயிற்சிச் சான்றிதழ்கள் மத்திய அரசால் நோட்டரி வலைதளம் மூலம் வழங்கப்பட்டுள்ளன.
இந்தத் தகவலை சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகத்தின் (தனிப்பொறுப்பு) இணையமைச்சர் மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை இணையமைச்சர் திரு. அர்ஜுன் ராம் மேக்வால் இன்று மாநிலங்களவையில் ஒரு கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்தார்.
***
(Release ID: 2153522)
AD/SM/DL
(Release ID: 2153801)