பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்
செயற்கை நுண்ணறிவு எழுத்தறிவு திட்டத்தின் கீழ் சுமார் 2500 மகளிருக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது
இடுகை இடப்பட்ட நாள்:
06 AUG 2025 4:13PM by PIB Chennai
2025 மே மாதத்தில் இருந்து யசோதா செயற்கை நுண்ணறிவு என்ற தலைப்பில் மகளிருக்காக செயற்கை நுண்ணறிவு எழுத்தறிவு திட்டத்தை தேசிய மகளிர் ஆணையம் நடத்தி வருகிறது. இது இணையப் பாதுகாப்பு, டிஜிட்டல் தனியுரிமை, பாதுகாப்பான ஆன்லைன் நடைமுறைகள் உள்ளிட்டவற்றில் டிஜிட்டல் உள்ளடக்கத்தை மேம்படுத்தவும், மகளிருக்கு அதிகாரமளிக்கவும் செயற்கை நுண்ணறிவு எழுத்தறிவில் நாட்டில் உள்ள மகளிரை ஈடுபடுத்துவதையும் நோக்கமாக கொண்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் சுயஉதவி குழுக்களைச் சேர்ந்த உறுப்பினர்கள், தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள உள்ளாட்சி பிரதிநிதிகள், மேயர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள், ஆஷாப் பணியாளர்கள், சிறு தொழில்துறையினர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள், காவல்துறை அதிகாரிகள், அரசு ஊழியர்கள் உட்பட ஊரக மற்றும் சிறு நகரங்களைச் சேர்ந்த சுமார் 2500 மகளிருக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
இத்தகவலை மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் திருமதி சாவித்ரி தாக்கூர் மாநிலங்களவையில் இன்று எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த போது தெரிவித்தார்.
***
(Release ID: 2153029)
AD/IR/AG/DL
(வெளியீட்டு அடையாள எண்: 2153239)
வருகையாளர் எண்ணிக்கை : 27