பிரதமர் அலுவலகம்
உத்தரகாசி, தாராலியில் நிகழ்ந்த வெள்ளப்பெருக்கு சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்
Posted On:
05 AUG 2025 4:54PM by PIB Chennai
உத்தரகாசி, தாராலியில் நிகழ்ந்த வெள்ளப்பெருக்கு சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இச்சம்பவத்தால் பாதிக்கப்பட்டுள்ள அனைவரும் நலம் பெறவும் அவர் விருப்பம் தெரிவித்துள்ளார்.
அங்கு நிலவும் சூழ்நிலை குறித்து உத்தராகண்ட் முதலமைச்சர் திரு புஷ்கர் சிங் தாமியுடனும் திரு மோடி பேசியுள்ளார்.
தேவையுடைவர்களுக்கு உரிய நேரத்தில் உதவிகள் கிடைப்பதை உறுதி செய்ய அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்று பிரதமர் உறுதியளித்துள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் கூறியிருப்பதாவது;
"உத்தரகாசியின் தாராலியில் நிகழ்ந்த துயரமான வெள்ளப்பெருக்கு சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அத்துடன், பாதிக்கப்பட்டுள்ள அனைவரும் நலம் பெற விரும்புகிறேன். முதலமைச்சர் புஷ்கர் தாமியுடன் பேசி அங்கு நிலவும் சூழல் குறித்த தகவல்களைப் பெற்றுள்ளேன். மாநில அரசின் மேற்பார்வையின் கீழ் நிவாரண மற்றும் மீட்புக் குழுக்கள் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றன. தேவையுடையவர்களுக்கு அனைத்து உதவிகளும் அளிக்கப்படுகின்றன.”
***
(Release ID: 2152581)
AD/IR/AG/DL
(Release ID: 2152730)
Read this release in:
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam