ஆயுஷ்
மூலிகை மருந்துகளுக்கான சர்வதேச ஒழுங்குமுறை ஒத்துழைப்பு பயிலரங்கு புதுதில்லியில் நாளை தொடங்குகிறது
Posted On:
05 AUG 2025 1:17PM by PIB Chennai
மூலிகை மருந்துகளுக்கான சர்வதேச ஒழுங்குமுறை ஒத்துழைப்பு பயிலரங்கு புதுதில்லியில் நாளை (06.08.2025) தொடங்குகிறது. 3 நாட்கள் நடைபெறும் இந்தப் பயிலரங்கிற்கு உலக சுகாதார அமைப்புடன் இணைந்து மத்திய ஆயுஷ் அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ளது. மூலிகை மருந்துகள் தொடர்பான ஒழுங்குமுறை திறனை வலுப்படுத்தும் அளவில் உலகளாவிய நிபுணர்கள் இந்தக் கருத்தரங்கில் இணைகின்றனர்.
இந்தப் பயிலரங்கை ஆயுஷ் அமைச்சக செயலாளர் வைத்திய ராஜேஷ் கொட்டேச்சா, உலக சுகாதார அமைப்பு - மூலிகை மருந்துகளுக்கான சர்வதேச ஒழுங்குமுறை ஒத்துழைப்பு அமைப்பின் தலைவர் டாக்டர் கிம் சங்க்சோல் ஆகியோர் தொடங்கி வைப்பார்கள். பூடான், புருனே, கியூபா, கானா, ஜப்பான், போலந்து, இலங்கை, உகாண்டா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் பயிலரங்கில் நேரடியாக பங்கேற்பார்கள். பிரேசில், எகிப்து, அமெரிக்கா ஆகியவற்றின் பிரதிநிதிகள் மெய்நிகர் முறையில் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மூலிகை மருந்துகளில் ஒத்துழைப்பை அதிகரிப்பது, பாதுகாப்பு மற்றும் செயல்திற நடைமுறைகளை விரிவுபடுத்துவது உலக அளவில் பாரம்பரிய மருத்துவமுறைகளை வலுப்படுத்துவது போன்றவை இந்தப் பயிலரங்கின் முக்கிய நோக்கங்களாகும். பாரம்பரிய மருந்துகளின் பாதுகாப்பு கண்காணிப்பை வலுப்படுத்தும் நோக்கத்துடன் ஆயுஷ் பாதுகாப்புத் திட்டமும், இதில் அறிமுகம் செய்யப்படும்.
----
(Release ID 2152419)
AD/SMB/KPG/KR
(Release ID: 2152602)