கலாசாரத்துறை அமைச்சகம்
பட்டியல் வகுப்பினரின் மேம்பாட்டுக்கான திட்டங்கள்
Posted On:
04 AUG 2025 5:11PM by PIB Chennai
பல்வேறு மத்திய அரசுத் திட்டங்களை உள்ளடக்கிய பெருந்திட்டமான கலா சன்ஸ்கிருதி விகாஸ் என்ற திட்டத்தை மத்திய கலாச்சார அமைச்சகம் நடைமுறைப்படுத்தி வருகின்றது. நாடு முழுவதும் பட்டியலினக் கலைஞர்கள் உள்ளிட்ட நிகழ்த்துக் கலைப்பிரிவில் தகுதி வாய்ந்த கலாச்சார அமைப்புகளுக்கும் தனிநபர்களுக்கும் இத்திட்டத்தின்கீழ் நிதியுதவி அளிக்கப்படுகின்றது.
கலா சன்ஸ்கிருதி விகாஸ் திட்டம் மத்திய நிதியுதவித் திட்டமாதலால் மாநில வாரியாக நிதி ஒதுக்கீடுகள் செய்யப்படுவதில்லை. எனினும் கலா சன்ஸ்கிருதி விகாஸ் பெருந்திட்டத்தின் கீழுள்ள அனைத்து திட்டங்கள் மற்றும் பட்டியல் வகுப்பினருக்கான சிறப்பு திட்டம் உட்பட அனைத்து துணைக்கூறுகளுக்கும் கடந்த நான்கு ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட நிதி ஒதுக்கீடுகளின் விவரங்கள் கீழே தரப்படுகின்றன.
நிதி ஆண்டு
|
ஒதுக்கப்பட்ட நிதி (ரூபாய் கோடியில்)
|
பயன்படுத்தப்பட்ட நிதி (ரூபாய் கோடியில்)
|
2021-22
|
177.30
|
177.30
|
2022-23
|
214.32
|
214.32
|
2023-24
|
218.65
|
218.65
|
2024-25
|
207.24
|
207.24
|
கலா சன்ஸ்கிருதி விகாஸ் திட்டத்தின் கீழ் பட்டியலினக் கலைஞர்கள் உள்ளிட்ட கலைஞர்கள், அரங்கக் குழுவினர், நாட்டார் கலைக்குழுக்கள் ஆகியவற்றிற்கு பயிற்சி வழங்குவதற்கும் கலைகளை நிகழ்த்துவதற்கான வாய்ப்புகளை உருவாக்கித் தருவதற்கும் மானிய நிதி வழங்கப்படுகிறது. பட்டயக் கணக்காளரால் சான்றளிக்கப்பட்டு சமர்ப்பிக்கப்படும் நிதி பயன்பாட்டு சான்றிதழ்களின் அடிப்படையில் மானிய நிதி பயன்பாடு கண்காணிக்கப்படுகிறது. இதுதவிர அமைச்சகத்தின் அதிகாரிகள் நிகழ்ச்சி நடைபெறும் இடங்களுக்குச் சென்று மானிய நிதி முறையாகப் பயன்படுத்தப்படுகிறதா என்றும் பரிசோதிக்கின்றனர்.
நாட்டில் கலை மற்றும் கலாச்சார மேம்பாட்டிற்காக கலாச்சார அமைச்சகம் செயல்படுத்தி வரும் பெருந்திட்டமாக கலா சம்ஸ்கிருதி விகாஸ் திட்டம் உள்ளது. இப்பெருந்திட்டத்தின் கீழ் பின்வரும் துணை திட்டங்கள் அடங்கியுள்ளன:
1. குரு-சிஷ்ய பரம்பரையை மேம்படுத்துவதற்கான நிதி உதவி
2. கலை மற்றும் கலாச்சார மேம்பாட்டிற்கான நிதி உதவித் திட்டம்
3. கலை மற்றும் கலாச்சார மேம்பாட்டிற்காக கல்வி மற்றும் ஆராய்ச்சி உதவித்தொகை வழங்கும் திட்டம்
4. தாகூர் கலாச்சார வளாகங்கள் கட்டுவதற்கான நிதி உதவி
5. அனுபவம் மிகுந்த கலைஞர்களுக்கு நிதி உதவி
6. சேவா போஜ் திட்டம்
7. தேசிய காந்தி பாரம்பரிய இடங்கள் இயக்கம்
8. தேசிய விருதுத் திட்டம்
இந்தத் திட்டங்களின் கீழ் கலாச்சார நிறுவனங்களுக்கும் தனிநபர்களுக்கும் நிதி உதவி அளிக்கப்படுகின்றது.
இந்தத் தகவலை மத்திய கலாச்சார மற்றும் சுற்றுலா அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத் இன்று மக்களவையில் ஒரு எழுத்துப்பூர்வமான பதிலில் தெரிவித்தார்.
***
(Release ID: 2152160)
AD/TS/DL
(Release ID: 2152368)