ஆயுஷ்
மருத்துவ தாவரங்களின் பாதுகாப்பு, பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஆகியவற்றுக்காக தேசிய மருத்துவ தாவர வாரியம் இரண்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது
Posted On:
04 AUG 2025 4:33PM by PIB Chennai
ஆயுஷ் அமைச்சகத்தின் தேசிய மருத்துவ தாவரங்கள் வாரியம் புதுதில்லியில் இன்று மத்திய ஆயுஷ், சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திரு பிரதாப்ராவ் ஜாதவ் தலைமையில் இரண்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது.
முதலாவது புரிந்துணர்வு ஒப்பந்தம் மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் உள்ள இஷ்வேத்-உயிரி தாவரங்கள் நிறுவனத்துடனும், இரண்டாவது புரிந்துணர்வு ஒப்பந்தம் புதுதில்லியில் உள்ள அகில இந்திய ஆயுர்வேத நிறுவனம் மற்றும் அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் இடையே கையெழுத்தானது.
இந்நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் திரு பிரதாப்ராவ் ஜாதவ், 2047-ம் ஆண்டுக்குள் ஆரோக்கியமான, தற்சார்புடைய இந்தியாவை கட்டமைக்க வேண்டும் என்ற பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வை இன்று நமது முயற்சிகளுக்கு வழிகாட்டுவதாக கூறினார். இந்தியாவின் செழுமைமிக்க மருத்துவ தாவர பாரம்பரியத்தை பாதுகாப்பதிலும், மேம்படுத்துவதிலும் முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ள இந்த ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ள நிறுவனங்களை தாம் வாழ்த்துவதாக தெரிவித்தார். நவீன அறிவியலுடன் ஒருங்கிணைந்த பாரம்பரிய அறிவை ஒருங்கிணைப்பதன் மூலம் இந்த லட்சிய தொலைநோக்குப் பார்வையை நனவாக்குவதில் அர்த்தமுடைய முன்னேற்றத்தை நாம் எட்டுவதாக அவர் கூறினார்.
***
(Release ID: 2152130)
AD/IR/AG/DL
(Release ID: 2152283)