தேர்தல் ஆணையம்
azadi ka amrit mahotsav

பீகாரில் வாக்காளர் தீவிர சிறப்புத் திருத்தம் தொடர்பான தினசரி அறிக்கை

Posted On: 03 AUG 2025 5:56PM by PIB Chennai

பீகாரில் வாக்காளர் தீவிர சிறப்புத் திருத்தத்தின் அடிப்படையில், 2025 ஆகஸ்ட் 01 அன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இது தொடர்பாக ஒரு மாதத்திற்குள் முறையீடு செய்யலாம் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி இன்று (03.08.2025) மாலை 3 மணி வரை பெறப்பட்ட விண்ணப்பங்கள் விவரம்.

* அரசியல் கட்சிகளிடமிருந்து கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபனைகள் இதுவரை பெறப்படவில்லை.

* வரைவுப் பட்டியல் தொடர்பாக வாக்காளர்களிடமிருந்து நேரடியாகப் பெறப்பட்ட கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபனைகள் எண்ணிக்கை - 941

* 18 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதை எட்டிய புதிய வாக்காளர்களிடமிருந்து பெறப்பட்ட படிவங்கள் - 4,374

விதிகளின்படி, உரிமைகோரல்கள் மற்றும் ஆட்சேபனைகள் 7 நாட்களுக்குப் பிறகு சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அதிகாரி அல்லது வாக்காளர் பதிவு உதவி அதிகாரியால் தீர்க்கப்பட வேண்டும்.

***

(Release ID: 2151957)

AD/SM/PLM/RJ


(Release ID: 2151983)
Read this release in: Hindi , English , Urdu , Bengali