மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
மீரட்டில் தேசிய நிதி மற்றும் தகுதி உதவித்தொகை திட்டம் குறித்த விழிப்புணர்வு அமர்வு நடைபெற்றது
Posted On:
03 AUG 2025 1:38PM by PIB Chennai
மத்திய கல்வி அமைச்சகத்தின் பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறை, மத்திய அரசின் திட்டமான தேசிய நிதி மற்றும் தகுதி உதவித்தொகைத் திட்டம் குறித்த விழிப்புணர்வு அமர்வை பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறையின் பொருளாதார ஆலோசகர் திருமதி ஏ. ஸ்ரீஜா தலைமையில் 2025 ஆகஸ்ட் 02 அன்று மீரட்டில் ஏற்பாடு செய்தது. உத்தரபிரதேசத்தின் பாக்பத், புலந்த்ஷாஹர், கௌதம் புத்த நகர், காசியாபாத், ஹாபூர், மீரட், முசாபர்நகர், சஹாரன்பூர், ஷாம்லி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த அதிகாரிகள் இதில் பங்கேற்றனர்.
திருமதி ஏ. ஸ்ரீஜா தமது வரவேற்பு உரையில், பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவுகளைச் சேர்ந்த குழந்தைகள், குறிப்பாக ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையிலான கல்வியை முடிக்க உதவும் வகையில் செயல்படுத்தப்படும் ஒரு தகுதி உதவித்தொகைத் திட்டமே தேசிய நிதி மற்றும் தகுதி உதவித்தொகைத் திட்டம் என்று எடுத்துரைத்தார். தகுதியான குழந்தைகள் உதவித்தொகை பெறும் வகையில், தேசிய உதவித்தொகை இணையதளத்தில் மாணவர்களின் விண்ணப்பங்களை சரியான நேரத்தில் சரிபார்ப்பதில் அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
இத்திட்டம் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் ஒரு உதவித்தொகை திட்டமாகும். ஆண்டுக்கு ₹ 12000 உதவித் தொகையானது, ஆதார் கட்டணப் பிரிவைப் பயன்படுத்தி நேரடிப் பலன் பரிமாற்றமாக மாணவர்கள் அல்லது அவர்களது பெற்றோரின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது. இதற்காக வங்கிக் கணக்கு ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட வேண்டும்.
***
(Release ID: 2151920)
AD/SM/PLM/RJ
(Release ID: 2151939)