பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
குவஹாத்தியில் மத்திய நிர்வாகத் தீர்ப்பாயத்தின் புதிய வளாகம் - மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் திறந்து வைத்தார்
பிரதமர் திரு நரேந்திர மோடியின் ஆட்சியில் வடகிழக்குப் பகுதி விரைவான வளர்ச்சியை அடைந்து வருகிறது - டாக்டர் ஜிதேந்திர சிங்
Posted On:
02 AUG 2025 5:14PM by PIB Chennai
குவஹாத்தியில் இன்று (02.08.2025) மத்திய நிர்வாகத் தீர்ப்பாயத்தின் புதிய நீதிமன்றம் மற்றும் அலுவலக வளாகத்தை மத்திய பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியத் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய அவர் கடந்த 11 ஆண்டுகளில் பிரதமர் திரு நரேந்திர மோடியின் ஆட்சியில் வடகிழக்குப் பகுதி குறிப்பிடத்தக்க வளர்ச்சியை அடைந்துள்ளதாகக் கூறினார். பழமையான குவஹாத்தி நிர்வாகத் தீர்ப்பாய அமர்வு, நிறுவப்பட்டு கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்குப் பிறகு, இப்போது சொந்தக் கட்டடத்தைப் பெற்றுள்ளது என்று தெரிவித்தார்
மத்திய நிர்வாகத் தீர்ப்பாயத்தின் பரிணாம வளர்ச்சியை எடுத்துரைத்த டாக்டர் ஜிதேந்திர சிங், அரசு ஊழியர்களுக்கு குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் நீதி கிடைப்பதை உறுதி செய்வதற்காக 1985-ம் ஆண்டு தீர்ப்பாயம் அமைக்கப்பட்ட போதிலும், அது பல ஆண்டுகளாக செயல்பாட்டுக் கட்டுப்பாடுகளால் தடுமாற்றத்தைச் சந்தித்தது என்றார்.
1985-ம் ஆண்டு முதல் இதுவரை மத்திய நிர்வாகத் தீர்ப்பாயத்தால் தீர்க்கப்பட்ட மொத்தம் 8.88 லட்சம் வழக்குகளில், கடந்த பத்து ஆண்டுகளில் மட்டும் 2.54 லட்சத்திற்கும் அதிகமான வழக்குகள் தீர்க்கப்பட்டுள்ளன என அவர் குறிப்பிட்டார். இது மொத்த தீர்வில் மூன்றில் ஒரு பங்கு என அவர் கூறினார்.
அசாம் அமைச்சர் ரஞ்சித் குமார் தாஸ், மத்திய நிர்வாகத் தீர்ப்பாயத்தின் தலைவர் நீதிபதி ஆர்.கே. மோரே, பிற நீதித்துறை பிரமுகர்கள், சட்டத்துறை பிரதிநிதிகள் இதில் பங்கேற்றனர்.
***
(Release ID: 2151760)
AD/PLM/RJ
(Release ID: 2151866)