கப்பல் போக்குவரத்து அமைச்சகம்
azadi ka amrit mahotsav

திப்ருகரில் புகழ்பெற்ற அறிஞர், இலக்கியவாதி டாக்டர் நாகேன் சைக்கியாவை மத்திய அமைச்சர் திரு சர்பானந்தா சோனோவால் சந்தித்தார்

Posted On: 02 AUG 2025 4:53PM by PIB Chennai

மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் துறை அமைச்சர் திரு சர்பானந்தா சோனோவால், புகழ்பெற்ற அறிஞர், இலக்கியவாதி மற்றும் சிந்தனையாளர் டாக்டர் நாகேன் சைக்கியாவை திப்ருகரில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து, அவரது நலனைப் பற்றி விசாரித்து பல்வேறு விஷயங்கள் குறித்து  உரையாடினார்.

டாக்டர் சைக்கியாநல்ல ஆரோக்கியம் மற்றும் நீண்ட ஆயுளுடன் வாழவாழ்த்திய ஸ்ரீ சர்பானந்தா சோனோவால், டாக்டர் நாகேன் சைக்கியாவின் தத்துவமும் விலைமதிப்பற்ற பங்களிப்புகளும் தேசிய வாழ்க்கையை வளப்படுத்தியுள்ளன. மேலும் இளைய தலைமுறையினரை தொடர்ந்து ஊக்கப்படுத்தி வருகின்றன. அவரைச் சந்திப்பதும், அவரது ஆசீர்வாதங்களைப் பெறுவதும், அவரது ஞானமான ஆலோசனையிலிருந்து பயனடைவதும் ஒரு பாக்கியம். அவரது வார்த்தைகள் உண்மையிலேயே ஊக்கமளிப்பதாக இருந்தன என்று கூறினார்.

***

(Release ID: 2151754)

AD/ PKV/RJ


(Release ID: 2151821)
Read this release in: English , Hindi , Assamese