சுற்றுலா அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஜம்மு-காஷ்மீரில் சுற்றுலா மேம்பாடு

Posted On: 28 JUL 2025 3:26PM by PIB Chennai

ஜம்மு-காஷ்மீருக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை குறித்து அந்த யூனியன் பிரதேசத்தின் நிர்வாகம் புள்ளி விவரங்களை வெளியிட்டுள்ளது.

2023-ம் ஆண்டு 2 கோடியே 6 லட்சம் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளும், 55 ஆயிரம் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் ஜம்மு-காஷ்மீருக்கு வந்துள்ளனர்.

2024-ம் ஆண்டு 2 கோடியே 35 லட்சம் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளும், 65 ஆயிரம் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் ஜம்மு-காஷ்மீருக்கு வந்துள்ளனர்.

இந்த ஆண்டை (2025) பொருத்தவரை பஹல்காம் தீவிர தாக்குதலுக்கு முன்பு, பின்பு என தனித்தனியாக  புள்ளி விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை. இந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூன் மாதம் வரையிலான காலகட்டத்தில் மொத்தம் 95 லட்சம் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளும், 19 ஆயிரம் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் ஜம்மு-காஷ்மீருக்கு வந்துள்ளனர்.

ஜம்மு-காஷ்மீரில் சுற்றுலாவை மேம்படுத்த மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.

மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்துள்ள பதிலில் சுற்றுலாத்துறை அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத் இத்தகவலை தெரிவித்துள்ளார்.

***

(Release ID: 2149246)

AD/PLM/AG/KR/DL


(Release ID: 2149404)