சுற்றுலா அமைச்சகம்
வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை
Posted On:
28 JUL 2025 3:33PM by PIB Chennai
இந்திய வம்சாவளியினர் தங்களுடைய இந்தியரல்லாத நண்பர்களை ஆண்டுதோறும் இந்தியாவில் பயணம் செய்ய ஊக்குவிப்பதன் மூலம் சிறப்புமிக்க இந்திய தூதர்களாக திகழும் வகையில் சுற்றுலா அமைச்சகத்தால் இந்தியாவில் பயணம் செய்யுங்கள் என்ற முன்முயற்சி தொடங்கப்பட்டது. தற்போது வரை, இதன் மூலம் 30 மின்னணு-சுற்றுலா விசாக்கள் வழங்கப்பட்டுள்ளன.
உலகளாவிய சுற்றுலா சந்தையில் இந்தியாவின் பங்களிப்பை அதிகரிக்கச் செய்யும் நோக்கில், அதிகம் அறியப்படாத இடங்கள் மற்றும் கலாச்சார பாரம்பரிய தளங்கள் உட்பட நாட்டின் சுற்றுலா தலங்கள் மற்றும் தயாரிப்புகளை மேம்படுத்துவதே இந்த முயற்சியின் நோக்கமாகும். சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிக்க, வெளிநாடுகளில் உள்ள இந்திய தூதரகங்கள், பயண வர்த்தகத் தொழில்துறையினர் மற்றும் மாநில அரசுகள், யூனியன் பிரதேச நிர்வாகங்களுடன் இணைந்து வெளிநாடுகளில் உள்ள சாத்தியமான சந்தைகளில் சுற்றுலா ஊக்குவிப்பு நடவடிக்கைகளை சுற்றுலா அமைச்சகம் மேற்கொள்கிறது.
இத்தகவலை மத்திய சுற்றுலா மற்றும் கலாச்சாரத்துறை அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத் இன்று மக்களவையில் கேள்வி நேரத்தின் போது எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2149258
***
AD/SM/IR/RJ/KR
(Release ID: 2149315)