கலாசாரத்துறை அமைச்சகம்
மே மாதம் நடைபெற்ற பிரிக்ஸ் கலாச்சார அமைச்சர்கள் கூட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட முக்கிய முடிவுகள்
Posted On:
28 JUL 2025 3:30PM by PIB Chennai
பிரேசில் நாட்டின் பிரேசிலியாவில் 2025 மே 26 அன்று பிரிக்ஸ் நாடுகளின் கலாச்சார அமைச்சர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்திய தரப்பில் கலாச்சாரத்துறை அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத் தலைமையில் உயர்நிலைக் குழு பங்கேற்றது.
கலாச்சாரத்துறையில் உள்ளடக்கிய தன்மை மற்றும் நிலையான நிர்வாக நடைமுறைகளுக்கு உலகளாவிய தென்பகுதி நாடுகளிடையே ஒத்துழைப்பை வலுப்படுத்துதல் என்ற கருப்பொருளில் இக்கூட்டம் நடைபெற்றது. பிரிக்ஸ் நாடுகளின் அரசுகளுக்கு இடையே கலாச்சாரத்துறை தொடர்பாக 2015-ம் ஆண்டு ஒப்பந்தத்தை தீவிரமாக செயல்படுத்துதல், 2022-ம் ஆண்டு வெளியிடப்பட்ட செயல்திட்டங்களை அமல்படுத்துதல் போன்றவை குறித்து விவாதிக்கப்பட்டது.
திரைப்பட விழாக்கள், கலை, கலாச்சார நிகழ்ச்சிகள், அருங்காட்சியகங்கள், கலைப் பொருட்கள் கண்காட்சி, நாட்டுப்புற கலைகள் போன்றவற்றில் பிரிக்ஸ் நாடுகளிடையே ஒத்துழைப்பை அதிகரிப்பது குறித்தும் இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துமூலம் அளித்துள்ள பதிலில் மத்திய கலாச்சாரத்துறை அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத் இத்தகவலை தெரிவித்துள்ளார்.
***
(Release ID: 2149255)
AD/PLM/AG/KR
(Release ID: 2149314)