கனரகத் தொழில்கள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கனரக தொழில்துறை அமைச்சகம் சார்பில் சிறப்பு விவாத அமர்வு - மத்திய இணையமைச்சர் திரு பூபதி ராஜூ சீனிவாச வர்மா பங்கேற்பு

प्रविष्टि तिथि: 28 JUL 2025 2:17PM by PIB Chennai

ஷியாமா பிரசாத் முகர்ஜியின் 125-வது பிறந்த ஆண்டை முன்னிட்டு புதுதில்லியில் மத்திய கனரக தொழில்துறை அமைச்சகம் இன்று (28.07.2025) சிறப்பு விவாத அமர்வை நடத்தியது. இதில் தலைமை விருந்தினராக பங்கேற்றுப் பேசிய மத்திய கனரக  தொழில்துறை இணையமைச்சர்  திரு பூபதி ராஜூ சீனிவாச வர்மா, இந்தியாவின் தொழில்துறை மேம்பாட்டுக்கு ஷியாமா பிரசாத் முகர்ஜி முக்கிய பங்காற்றியதாக கூறினார்.

சிறந்த கல்வியாளராகவும், நாடாளுமன்ற வாதியாகவும், பல்துறை வல்லுநராகவும், ஷியாமா பிரசாத் முகர்ஜி திகழ்ந்ததாக அமைச்சர் கூறினார். ஒரே தேசம், ஒரே அரசியல் சாசனம் என்ற கொள்கையில் உறுதியான நம்பிக்கையுடன் அவர் இருந்ததாக அமைச்சர் குறிப்பிட்டார்.

இந்த நிகழ்ச்சியில், கனரக தொழில்துறை அமைச்சகத்தின்  செயலாளர் திரு கம்ரன் ரிஸ்வி, டாக்டர் ஷியாமா பிரசாத் முகர்ஜி ஆராய்ச்சி அறக்கட்டளை இயக்குநர் திரு பினய் குமார் ஆகியோரும் உரையாற்றினர்.  கனரக தொழில்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள், இத்துறையின் கீழ் செயல்படும் பொதுத்துறை நிறுவனங்களின் இயக்குநர்கள், தொழில்துறை பிரதிநிதிகள் உள்ளிட்டோர் இந்த அமர்வில் பங்கேற்றனர்.

***

(Release ID: 2149222)

AD/PLM/AG/KR


(रिलीज़ आईडी: 2149290) आगंतुक पटल : 20
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Punjabi