பாதுகாப்பு அமைச்சகம்
இந்தியா - சிங்கப்பூர் இடையே கூட்டு ராணு பயிற்சி ஜோத்பூரில் தொடக்கம்
Posted On:
27 JUL 2025 1:23PM by PIB Chennai
இந்தியா-சிங்கப்பூர் கூட்டு ராணுவப் பயிற்சியின் 14-வது பதிப்பான "போல்ட் குருக்ஷேத்ரா 2025" என்ற பயிற்சி இன்று (27 ஜூலை 2025) ஜோத்பூரில் தொடங்கி 2025 ஆகஸ்ட் 04 வரை நடைபெறுகிறது. இந்தப் பயிற்சியில் 4-வது சிங்கப்பூர் கவசப் பிரிவின் 42வது படைப்பிரிவும், இந்திய ராணுவத்தின் இயந்திரமயமாக்கப்பட்ட காலாட்படை பிரிவும் பங்கேற்றுள்ளன.
இந்தப் பயிற்சி, இயந்திரமயமாக்கப்பட்ட போருக்கான செயல்பாட்டு நடைமுறைகள் குறித்த பயிற்சியை நோக்கமாகக் கொண்ட போர் பயிற்சியாக நடத்தப்படுகிறது. இது இந்திய ராணுவத்தின் தளவாடங்களின் கண்காட்சியுடன் நிறைவடையும்.
தொடக்க விழாவில் இரு தரப்பிலிருந்தும் மூத்த அதிகாரிகள் பங்கேற்றனர். இயந்திரமயமாக்கப்பட்ட காலாட்படை பிரிவின் கட்டளை அதிகாரி கர்னல் அர்ஜுன் கணபதி இந்திய பிரிவுக்குத் தலைமை வகித்தார். 42 சிங்கப்பூர் கவசப் படைப்பிரிவின் பட்டாலியன் கமாண்டர் லெப்டினன்ட் கர்னல் கியூ ஜி யூங் சிங்கப்பூர் அணிக்கு தலைமை வகித்தார்.
போல்ட் குருக்ஷேத்ரா 2025 பயிற்சி, இந்தியாவிற்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான வலுவான பாதுகாப்பு உறவுகளை மேலும் பலப்படுத்தி ஒத்துழைப்பை வளர்க்கும்.
*****
(Release ID: 2149031)
AD/PLM/RJ
(Release ID: 2149063)
Visitor Counter : 3