தேர்தல் ஆணையம்
azadi ka amrit mahotsav

7.23 கோடி பீகார் வாக்காளர்கள் சிறப்பு தீவிர திருத்த செயல்பாட்டில் முழு நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளனர்.

99.8% பீகார் வாக்காளர்கள் இதுவரை சேர்க்கப்பட்டுள்ளனர்.

Posted On: 25 JUL 2025 5:03PM by PIB Chennai

7.23 கோடி வாக்காளர்களின் படிவங்கள் பெறப்பட்டு டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளன; இந்த அனைத்து வாக்காளர்களின் பெயர்களும் வரைவு வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படும். மீதமுள்ள வாக்காளர்களின் வாக்குச்சாவடி நிலை அலுவலர் அறிக்கைகளுடன் படிவங்களின் டிஜிட்டல் மயமாக்கலும் ஆகஸ்ட் 1, 2025 க்குள் முடிக்கப்படும்.

படிவங்களை நிரப்பாத அல்லது இறந்த மற்றும் நிரந்தரமாக இடம்பெயர்ந்த வாக்காளர்களின் பட்டியல்கள் ஜூலை 20 அன்று அனைத்து 12 அரசியல் கட்சிகளுடனும் [பகுஜன் சமாஜ் கட்சி; பாரதிய ஜனதா கட்சி; இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்); இந்திய தேசிய காங்கிரஸ்; ராஷ்ட்ரிய ஜனதா தளம்; ஐக்கிய ஜனதா தளம்; ராஷ்ட்ரிய லோக் சமதா கட்சி; இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்); ராஷ்ட்ரிய லோக் ஜனசக்தி கட்சி; லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ்); தேசிய மக்கள் கட்சி; ஆம் ஆத்மி கட்சி] பகிரப்பட்டுள்ளது. இதில் ஏதேனும் பிழைகள் இருந்தால் அவை ஆகஸ்ட் 1 ஆம் தேதி வெளியிடப்படும் வரைவு வாக்காளர் பட்டியலில் சரிசெய்யப்படும்.

ஜூன் 24, 2025 முதல், உள்ளூர் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள்/ வாக்குச்சாவடி நிலை ஏஜெண்ட்டுகள் பின்வரும் தகவல்களை அளித்துள்ளனர்:

சுமார் 22 லட்சம் இறந்த வாக்காளர்களின் பெயர்கள்.

ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் பதிவு செய்யப்பட்ட சுமார் 7 லட்சம் வாக்காளர்கள்.

சுமார் 35 லட்சம் வாக்காளர்கள் நிரந்தரமாக இடம்பெயர்ந்துள்ளனர் அல்லது கண்டுபிடிக்க முடியவில்லை.

சுமார் 1.2 லட்சம் வாக்காளர்களின் கணக்கெடுப்பு படிவங்கள் இன்னும் பெறப்படவில்லை.

இதுவரை சிறப்பு தீவிர திருத்தத்தின் முதல் கட்டத்தை வெற்றிகரமாக முடித்ததற்கான பெருமை, பீகார் தலைமை நிர்வாக அதிகாரி, 38 மாவட்ட தேர்தல் அலுவலர்கள், 243 வாக்காளர் பதிவு அலுவலர்கள், 2,976 உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள், 77,895 வாக்குச் சாவடிகளில் பணியமர்த்தப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், தன்னார்வலர்கள், அனைத்து 12 அரசியல் கட்சிகள், அவற்றின் 38 மாவட்டத் தலைவர்கள் மற்றும் அவர்களால் பரிந்துரைக்கப்பட்ட 1.60 லட்சம் வாக்குச்சாவடி நிலை ஏஜெண்ட்டுகள்  ஆகியோரையே சாரும்.

சிறப்பு தீவிர திருத்த உத்தரவின்படி, ஆகஸ்ட் 1 முதல் செப்டம்பர் 1 வரை, எந்தவொரு வாக்காளர் அல்லது அரசியல் கட்சியும் பரிந்துரைக்கப்பட்ட படிவங்களை நிரப்பி, விடுபட்ட எந்தவொரு தகுதியுள்ள வாக்காளருக்காகவும் வாக்காளர் பதிவு அலுவலர்களிடம் உரிமைகோரல்களைச் சமர்ப்பிக்கலாம் அல்லது தகுதியற்ற வாக்காளரை நீக்குவதற்கு ஆட்சேபனைகளைத் தாக்கல் செய்யலாம்.

 

***

(Release ID: 2148427)

AD/SM/ DL


(Release ID: 2148682)
Read this release in: English , Hindi , Urdu , Malayalam