தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

திரைப்படத் துறையில் டிஜிட்டல் திருட்டைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை அரசு வலுப்படுத்துகிறது

Posted On: 25 JUL 2025 6:09PM by PIB Chennai

படைப்புத் துறையில் டிஜிட்டல் திருட்டு ஏற்படுத்தும் பாதகமான தாக்கத்தை அரசு உணர்ந்துள்ளது. இந்த முக்கியமான பிரச்சினையைத் தீர்க்க, பின்வரும் சீர்திருத்தங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன:

 

2023 ஆம் ஆண்டில், டிஜிட்டல் திருட்டுக்கு எதிரான நடவடிக்கைகளை உள்ளடக்கியதாக, 1952 ஆம் ஆண்டு சினிமாடோகிராஃப் சட்டத்தில்  அரசு திருத்தம் மேற்கொண்டது.

 

இந்தத் திருத்தங்களின்படி, குறைந்தபட்சம் 3 மாத சிறைத்தண்டனை மற்றும் ₹3 லட்சம் அபராதம் விதிக்கப்படும், இது 3 ஆண்டுகள் வரை நீட்டிக்கப்படலாம் மற்றும் தணிக்கை செய்யப்பட்ட மொத்த உற்பத்தி செலவில் 5% வரை அபராதம் விதிக்கப்படலாம்.

 

சினிமாடோகிராஃப் சட்டப் பிரிவு 6ஏஏ மற்றும் 6ஏபி ஆகியவை அங்கீகரிக்கப்படாத திரைப்படப் பதிவு மற்றும் ஒலிபரப்பைத் தடை செய்கின்றன.

 

சினிமாடோகிராஃப் சட்டப் பிரிவு 7(1பி)(ii) புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளது. திருட்டு உள்ளடக்கத்தை ஹோஸ்ட் செய்வதற்கு இடைத்தரகர்களுக்குத் தேவையான வழிமுறைகளை வழங்க இது அரசிற்கு அதிகாரம் அளிக்கிறது.

 

பதிப்புரிமைதாரர்கள் அல்லது அங்கீகரிக்கப்பட்ட நபர்களிடமிருந்து புகார்களைப் பெறவும், அத்தகைய உள்ளடக்கத்தை ஹோஸ்ட் செய்யும் இடைத்தரகர்களுக்குத் தேவையான வழிமுறைகளை வழங்கவும் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் மற்றும் மத்திய திரைப்படச் சான்றிதழ் வாரியம் அதிகாரம் பெற்றுள்ளன.

 

திருட்டு எதிர்ப்பு உத்திகளை வலுப்படுத்தவும், ஒருங்கிணைந்த செயல் திட்டங்களை உருவாக்கவும் அமைச்சகங்களுக்கு இடையேயான குழு அமைக்கப்பட்டுள்ளது.

 

உலக ஒலி ஒளி பொழுதுபோக்கு உச்சிமாநாடு (வேவ்ஸ்) 2025 இன் போது, டிஜிட்டல் திருட்டை எதிர்த்துப் போராடுவதற்கான தொழில்நுட்ப தீர்வுகளை உருவாக்குவதற்கான ஒரு போட்டி நடத்தப்பட்டது.

 

டிஜிட்டல் திருட்டு அச்சுறுத்தலைத் தடுக்கவும், இந்தியாவின் பொழுதுபோக்கு சூழலியலின் ஒருமைப்பாட்டைப் பாதுகாக்கவும், சட்ட அமலாக்க நிறுவனங்கள் உட்பட தொடர்புடைய பங்குதாரர்களுடன் அரசு தொடர்ந்து பணியாற்றி வருகிறது.

 

இந்தத் தகவலை மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரத் துறை இணையமைச்சர் டாக்டர் எல். முருகன் மாநிலங்களவையில் சமர்ப்பித்தார்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2148494

 

***

(Release ID: 2148494)

AD/RB/ DL


(Release ID: 2148679)