ரெயில்வே அமைச்சகம்
azadi ka amrit mahotsav

78% க்கும் அதிகமான ரயில் பாதைகள் வேகத்தைத் தாங்கும் வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளன

Posted On: 25 JUL 2025 3:46PM by PIB Chennai

கடந்த 10 ஆண்டுகளில் இந்திய ரயில்வேயின் நடவடிக்கைகளின் விளைவாக, தண்டவாளங்களின் வேகத் திறனில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டு, மணிக்கு 110 கி.மீ வேகத்தில் செல்லும் ரயில்களின் அழுத்தத்தைத் தாங்கும் வகையில் ரயில் பாதைகள் மேம்படுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே அமைச்சர் திரு அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்துள்ள பதிலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அந்தப் பதிலில், அவர் மேலும் கூறியுள்ளதாவது;

ரயில் பாதைகளின் வேகத்தை அதிகரிக்கும் வகையில் மேம்படுத்துதல் நடவடிக்கைகள்   பெருமளவில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 60 கிலோ எடையுள்ள தண்டவாளங்கள், அகலமான அடித்தள கான்கிரீட் ஸ்லீப்பர்கள், தடிமனான வலை சுவிட்சுகள், நீண்ட ரயில் பேனல்கள், H பீம் ஸ்லீப்பர்கள், நவீன பாதை புதுப்பித்தல் மற்றும் பராமரிப்பு இயந்திரங்கள் போன்றவை தண்டவாள மேம்பாட்டிற்கான நடவடிக்கைகளில் அடங்கும்.

2014 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2025 ஆம் ஆண்டில் ரயில் பாதைகளின் வேகத் திறன் பெருமளவில் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்திய ரயில்வே கட்டமைப்பில் தற்போது இயங்கும் வந்தே பாரத் ரயில்கள் அரை-அதிவேக ரயில் சேவைகளாகும், அவை மணிக்கு 180 கிமீ வேகம் மற்றும் அதிகபட்ச இயக்க வேகம் மணிக்கு 160 கிமீ ஆகும். ரயிலின் சராசரி வேகம் தண்டவாளத்தின் வடிவியல், வழியில் நிறுத்தப்படும் இடங்கள், பிரிவில் பராமரிப்பு பணிகள் போன்றவற்றைப் பொறுத்தது.

வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் பெட்டியின் முதல் முன்மாதிரி ஏற்கனவே தயாரிக்கப்பட்டு விட்டது. விரிவான கள சோதனைகள் மற்றும் அதில் பெறப்பட்ட அனுபவத்தின் அடிப்படையில், வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயிலின் முதல் ரேக் இயக்கப்பட்டு வருகிறது.

 ***

(Release ID: 2148364)

AD/PKV/SG/KR/DL


(Release ID: 2148532)
Read this release in: Urdu , Hindi , Gujarati , English