சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
அனுமதி வழங்கப்பட்ட 157 புதிய மருத்துவக்கல்லூரிகளில் 131 மருத்துவ கல்லூரிகள் செயல்பாட்டில் உள்ளன
Posted On:
25 JUL 2025 3:46PM by PIB Chennai
இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான இடங்களின் எண்ணிக்கையை மத்திய அரசு அதிகரித்துள்ளது. இதனையடுத்து கடந்த 2014-ம் ஆண்டு முதல் இன்று வரை மருத்துவக்கல்லூரிகள் மற்றும் மாணவர் சேர்க்கைக்கான இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இதன்படி நாடு முழுவதும் உள்ள மருத்துவக்கல்லூரிகளின் எண்ணிக்கை 387-லிருந்து 780- ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதே போல் இளநிலை மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான இடங்கள் 51,348-லிருந்து 1,15,900 ஆகவும், முதுநிலை மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கான இடங்கள் 31,185-லிருந்து 74,306 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஆங்கில முறை மருத்துவர்களாக இதுவரை 13,86,157 மருத்துவர்கள் பதிவு செய்துள்ளதாக தேசிய மருத்துவ ஆணையம் தெரிவித்துள்ளது. ஆயுஷ் மருத்துவ முறையின் கீழ் 7,51,768 மருத்துவர்கள் பதிவு செய்துள்ளதாக ஆயுஷ் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, 811 நபர்களுக்கு ஒரு மருத்துவர் என்ற விகிதாச்சார அடிப்படையில் மருத்துவர்கள் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துமூலம் அளித்துள்ள பதிலில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் திருமதி அனுப்பிரியா படேல் இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2148365
***
AD/SV/AG/KR/DL
(Release ID: 2148528)